அவினாசி அருகே அடுத்தடுத்து நடந்த விபத்தில் வேன், கார், லாரி மோதல் போக்குவரத்து பாதிப்பு


அவினாசி அருகே அடுத்தடுத்து நடந்த விபத்தில் வேன், கார், லாரி மோதல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 16 Aug 2018 3:15 AM IST (Updated: 16 Aug 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

அவினாசியை அடுத்த தெக்கலூர் மேம்பாலத்தில் அடுத்தடுத்து நடந்த விபத்தில் வேன், கார், லாரி மோதியதில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

அவினாசி,

கோவையில் இருந்து ஈரோடு நோக்கி ஒரு சரக்கு வேன் வந்து கொண்டிருந்தது. அந்த வேன் அவினாசியை அடுத்த தெக்கலூர் மேம்பாலத்தில் வந்த போது எதிர்பாராதவிதமாக ரோட்டில் பக்கவாட்டு தடுப்புச்சுவரில் மோதியது. இதில் வேனில் இருந்த கோதுமை மாவு, சர்க்கரை பாக்கெட்டுகள் ரோட்டில் சிதறின. இந்த விபத்தில் வேன் டிரைவர் லேசான காயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வந்து நின்றது.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் ஆம்புலன்சின் பின்னால் மோதியது. இதில் ஆம்புலன்ஸ், கார் சேதம் அடைந்தது. இந்த சம்பவம் நடந்த சற்று நேரத்தில் கோவையில் இருந்து கன்டெய்னர் லாரி ஒன்று வேகமாக வந்தது. சம்பவ இடத்தில் கார், வேன், ஆம்புலன்ஸ் நிற்பதை பார்த்ததும் லாரி டிரைவர் லாரியின் வேகத்தை கட்டுப்படுத்த முயன்றார். ஆனால் அதற்குள் அந்த கன்டெய்னர் லாரி ரோட்டின் தடுப்புச்சுவரில் மோதிது. அடுத்தடுத்து நடந்த இந்த விபத்துகள் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.


Next Story