உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை


உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 16 Aug 2018 3:15 AM IST (Updated: 16 Aug 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் நேற்று ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

உளுந்தூர்பேட்டை, 


உளுந்தூர்பேட்டையில் வாரச்சந்தை உள்ளது. புதன்கிழமை தோறும் இயங்கும் இந்த வாரச்சந்தைக்கு உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், சங்கராபுரம், அரசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் அறுவடை செய்த தானியங்களை கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு செல்வது வழக்கம். மேலும் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளையும் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

அந்த வகையில் நேற்று நடந்த வாரச்சந்தைக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். அவற்றில் ஒரு ஆடு குறைந்தபட்சம் ரூ.4 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஆடுகளை சேலம், திருச்சி, கடலூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி சென்றனர். நேற்று நடந்த வாரச்சந்தையில் மட்டும் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Next Story