மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு காவிரி-கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் காவிரி-கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருச்சி,
கர்நாடகாவில் தொடர் மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் நிரம்பி மேட்டூர் அணைக்கு உபரிநீர் அதிகளவில் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் மேட்டூர் அணை 2-வது முறையாக நிரம்பி உள்ளது. இதையடுத்து அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருச்சி காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு செல்கிறது. வெள்ள அபாயத்தை தடுக்கும் வகையில் திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் காவிரி கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும், கரூர் மாவட்டம் மாயனூர், திருச்சி உத்தமர்சீலி பகுதிகளில் கரையோரங்களில் உள்ள வயல்களுக்குள் தண்ணீர் புகுந்ததில் பல ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த நெல், வாழை, கரும்பு, வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் சேதமாகி உள்ளன. நேற்று முன்தினம் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால், முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி, கொள்ளிடத்தில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.
நேற்று காலை நிலவரப்படி முக்கொம்பு மேலணைக்கு வினாடிக்கு 85 ஆயிரத்து 364 கனஅடி தண்ணீர் வந்தது. அதில் 30 ஆயிரத்து 407 கனஅடி காவிரியிலும், 50 ஆயிரத்து 597 கனஅடி தண்ணீர் கொள்ளிடத்திலும் திறந்து விடப்பட்டுள்ளது. திறக்கப்படும் தண்ணீர் குறைக்கப்பட்டு இருந்தாலும், காவிரி-கொள்ளிடம் ஆறுகளின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிளை வாய்க்கால்களிலும் 1,300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் அடுத்த 2 நாட்களில் திருச்சி வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காவிரி-கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளஅபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசும் காவிரி பாயும் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதோடு, அதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்ய உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

Related Tags :
Next Story