பலத்த மழை எதிரொலி: கேரளாவுக்கு, கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் போக்குவரத்து சேவை ரத்து


பலத்த மழை எதிரொலி: கேரளாவுக்கு, கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் போக்குவரத்து சேவை ரத்து
x
தினத்தந்தி 16 Aug 2018 4:00 AM IST (Updated: 16 Aug 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

பலத்த மழை காரணமாக கேரளாவுக்கு செல்லும் கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக அங்குள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன. பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கி இருக்கின்றன. இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் மழை பெய்து வருவதால் பெங்களூருவில் இருந்து மங்களூரு, குக்கே சுப்பிரமணியா, தர்மஸ்தலா, குந்தாப்புரா ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் குளுகுளு வசதி கொண்ட சொகுசு பஸ்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாகம் கூறி இருக்கிறது. அதே நேரத்தில் அந்த நகரங்களுக்கு சாதாரண வசதிகள் கொண்ட விரைவு பஸ்கள் எப்போதும் போல் இயக்கப்படும் என்று அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story