‘அண்ணியை அடைய ஆசைப்பட்டு அண்ணனை எரித்து கொன்றேன்’ கைதான மளிகை கடைக்காரர் வாக்குமூலம்
ஆத்தூர் அருகே கூலித்தொழிலாளி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் துப்பு துலங்கியது. அண்ணியை அடைய ஆசைப்பட்டு அண்ணனை எரித்து கொலை செய்ததாக கைதான மளிகை கடைக்காரர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆத்தூர்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே துலுக்கனூர் ஊராட்சி வசிஷ்ட நதி தடுப்பணை கரையோரம் கடந்த 11-ந்தேதி காலை ஒரு ஆண் உடல் எரிந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆத்தூர் நகர போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர் ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சி செட்டில்மெண்ட் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவருடைய மகன் நரேஷ்குமார் (வயது 35), என்று தெரியவந்தது. நரேஷ்குமார் கூலித்தொழில் செய்து வந்தார்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் நரேஷ்குமார் எரித்து கொலை செய்யப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த கொலை தொடர்பாக நரேஷ்குமாரின் சித்தப்பா கலைச்செல்வனின் மகன் அன்புராஜ் (30) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து ஆத்தூர் உப்பு ஓடை பாலம் அருகே பதுங்கி இருந்த அன்புராஜை இன்ஸ்பெக்டர் கேசவன், சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் ஆகியோர் கைது செய்தனர்.
போலீசில் அன்புராஜ் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
நான் ஆத்தூர் புதுப்பேட்டை பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறேன். எனது பெரியப்பா மகன் நரேஷ்குமார், வெளியூர்களுக்கு சென்று கூலி வேலை செய்து வந்தார். அவருடைய மனைவி மீது எனக்கு காதல் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி அவரிடம் சென்று பேசி வந்தேன். மேலும் அவரை அடைய ஆசைப்பட்டேன். இதற்கு அவரிடம் கேட்டபோது அவர் ஒத்துழைக்க மறுத்து விட்டார்.
நரேஷ்குமார் இருப்பதால் தான் அவர் ஒத்துழைக்க மறுக்கிறார், நரேஷ்குமாரை கொன்று விட்டால் அண்ணியை எளிதில் அடையலாம் என திட்டமிட்டேன். அதற்காக கடந்த 9-ந்தேதி காலை வீட்டில் இருந்த நரேஷ்குமாரை மோட்டார்சைக்கிளில் அழைத்துக்கொண்டு வாழப்பாடிக்கு சென்று மது அருந்தினோம். மீண்டும் ஆத்தூருக்கு வந்து மது அருந்தினோம். நரேஷ்குமாருக்கு அளவுக்கு அதிகமாக மது ஊற்றிக்கொடுத்தேன்.
பின்னர் துலுக்கனூர் வசிஷ்ட நதிக்கரைக்கு அழைத்துச் சென்றேன். அங்குள்ள கரும்பு தோட்டம் அருகில் அவரை மது அருந்த சொல்லிவிட்டு அதன் அருகில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு சென்று அங்கிருந்த வேல் கம்பை எடுத்து வந்து நரேஷ்குமார் கழுத்திலும், நெஞ்சிலும் மாறி மாறி குத்தினேன். அவர் உயிருக்கு போராடியபடி இருந்தார். அப்போது கற்களை எடுத்து வந்து தாக்கினேன். பிறகு மோட்டார்சைக்கிளில் ஆத்தூருக்கு வந்து ரூ.300-க்கு பால் கேனை விலைக்கு வாங்கினேன். அதில் ரூ.300-க்கு பெட்ரோல் வாங்கினேன்.
அங்கிருந்து திரும்பி வந்து நரேஷ்குமாரின் உடலின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தேன். உடல் எரிந்த பின்னர் அதை வசிஷ்ட நதிக்கரையில் போட்டு விட்டு ஓடி விட்டேன். தலைமறைவாக இருந்த என்னை ஆத்தூர் போலீசார் பிடித்தனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட அன்புராஜை போலீசார் ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-1 ல் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story