திருமானூர் அருகே பாசன வாய்க்கால்களை தூர்வாரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


திருமானூர் அருகே பாசன வாய்க்கால்களை தூர்வாரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 Aug 2018 4:15 AM IST (Updated: 17 Aug 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

திருமானூர் அருகே பாசன வாய்க்கால்களை தூர்வாரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்தில் உள்ள ஏரி, குளம் மற்றும் பாசன வாய்க்கால்களை தூர்வாரக்கோரியும், இதுதொடர்பாக பல முறை மாவட்ட நிர்வாகத்தில் மனு கொடுத்தும் நட வடிக்கை எடுக்காததை கண்டித்தும், இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை கண்டித்து திருமானூர் அருகே உள்ள கரைவெட்டியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த வெங்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதில் மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க சண்முக சுந்தரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணியன், மாவட்டக்குழு உறுப்பினர் தங்கமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் கரைவெட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story