பாகூரில் பரபரப்பு: மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டிகள் சிறைபிடிப்பு
கடலூரில் இருந்து பாகூருக்கு மணல் ஏற்றிவந்த மாட்டு வண்டிகளை உள்ளூர் தொழிலாளர்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாகூர்,
பாகூர் அருகே சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பாகூரை சுற்றியுள்ள மாட்டு வண்டி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் கடலூர் அருகே அழகியநத்தம் என்ற கிராமத்தில் உள்ள மணல் குவாரியில் இருந்து எடுத்து வந்து பாகூர் பகுதியில் மணல் விற்பனை செய்கிறார்கள்.
நேற்று காலை அழகிய நத்தம் மணல் குவாரியில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு கடலூர் பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பாகூர் பகுதிக்கு வந்தன. இதை பார்த்த உள்ளூர் மாட்டுவண்டி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள், அந்த மாட்டு வண்டிகளை சிறைபிடித்தனர்.
பாகூர் மாட்டு வண்டி தொழிலாளர்களை அழகியநத்தம் மணல் குவாரியில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும், மணல் விலையை குறைக்கவேண்டும் என்று அவர்கள் கூறினர். ஆனால் கடலூர் மாட்டு வண்டி தொழிலாளர்கள் இதற்கு மறுத்துவிட்டனர். இதனால் கடலூர் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கும், உள்ளூர் தொழிலாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த பாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, பேச்சுவார்த்தை நடத்தினர். மணல் விலையை குறைத்தால், பாகூர் பகுதியில் விற்பனை செய்யலாம். இல்லையென்றால் கடலூர் மாட்டு வண்டிகள் பாகூர் பகுதிக்கு வரக்கூடாது என்று உள்ளூர் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதில் சமரசம் ஏற்படாததால், பாகூர் பகுதிக்கு கடலூர் மாட்டு வண்டிகள் வரக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து கடலூர் மாட்டு வண்டிகளை பாகூர் தொழிலாளர்கள் விடுவித்தனர். இந்த சம்பவத்தால் பாகூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story