சுள்ளான் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டக்கோரி ஆர்ப்பாட்டம் மாதர் சங்கம் சார்பில் நடந்தது


சுள்ளான் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டக்கோரி ஆர்ப்பாட்டம் மாதர் சங்கம் சார்பில் நடந்தது
x
தினத்தந்தி 17 Aug 2018 4:15 AM IST (Updated: 17 Aug 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

சுள்ளான் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டக்கோரி மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வலங்கைமான்,

வலங்கைமான் அருகே உள்ள ஆதிச்சமங்கலம் ஊராட்சி வேதாம்பறை கிராமத்தில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். கைப்பம்பு அமைக்க வேண்டும். அங்கு உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மாதம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்.

ஆதிச்சமங்கலம்-வேதாம்பறை இடையே சுள்ளான் ஆற்றின் குறுக்கே உள்ள பழுதடைந்த பாலத்தை அகற்றி, புதிய பாலம் கட்ட வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சந்திரோதயம் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் கலைச்செல்வி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இதில் மாவட்ட செயலாளர் கோமதி, மாவட்ட தலைவர் சுமதி, ஒன்றிய தலைவர் மீனாட்சி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 

Next Story