கே.கே.நகரில் வீட்டில் பதுங்கல்: துப்பாக்கி முனையில் 4 ரவுடிகளை போலீசார் மடக்கி பிடித்தனர்
சென்னை கே.கே.நகரில் வீட்டில் பதுங்கி இருந்த 4 ரவுடிகளை போலீசார் சுற்றி வளைத்து துப்பாக்கிமுனையில் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
சென்னை,
சென்னை கே.கே.நகர் 102-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் 4 ரவுடிகள் பதுங்கி இருப்பதாக கே.கே.நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில் போலீஸ் படையினர் குறிப்பிட்ட வீட்டை சுற்றி வளைத்து நேற்றுமுன்தினம் இரவு சோதனை நடத்தினார்கள்.
துப்பாக்கிமுனையில் கைது
அப்போது அங்கு பதுங்கி இருந்த ஆதம்பாக்கத்தை சேர்ந்த நாகூர் மீரான் (வயது 26) குறளரசன் (27), மேற்கு மாம்பலத்தை சேர்ந்த வினோத் (27), பூந்தமல்லியை சேர்ந்த சதீஷ் (38) ஆகிய 4 ரவுடிகளையும் போலீசார் சுற்றி வளைத்து துப்பாக்கிமுனையில் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 4 பட்டாக்கத்திகள், ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. ரவுடி சதீஷ் மறைத்து வைத்திருந்த 1½ கிலோ கஞ்சா பொட்டலங்களும் கைப்பற்றப்பட்டது.
கொலை வழக்குகள்
கைதான இவர்கள் மீது ஆதம்பாக்கம், சூளைமேடு, குன்றத்தூர், பூந்தமல்லி ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது.
Related Tags :
Next Story