தூத்துக்குடியில் பாத்திரக்கடையில் தீ விபத்து


தூத்துக்குடியில் பாத்திரக்கடையில் தீ விபத்து
x
தினத்தந்தி 17 Aug 2018 3:30 AM IST (Updated: 17 Aug 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பாத்திரக்கடையில் நடந்த தீவிபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

தூத்துக்குடி, 



தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்தவர் சக்திலிங்கம்(வயது 58). இவர் தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையின் 3-வது மாடியில் உள்ள ஒரு அறையில் ஹாட்பாக்ஸ், கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை வைத்து இருந்தார்.

நேற்று மதியம் 3-வது மாடியில் இருந்த பொருட்கள் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் கரும்புகை கிளம்பியது. அப்போது பலத்த காற்று வீசியதால் தீ மளமளவென பற்றி எரிந்தது.
இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி அமுதா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இதில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story