பெருஞ்சாணி அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு முக்கடல் அணை நிரம்பி மறுகால் பாய்கிறது
குமரி மாவட்டத்தில் கனமழையால் கிராமங்களை சூழ்ந்த வெள்ளம் வடிகிறது. பெருஞ்சாணி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு நேற்று குறைக்கப்பட்டது. முக்கடல் அணை நிரம்பி மறுகால் பாய்கிறது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் தண்ணீர் வரத்து அதிகமானதால் நேற்றுமுன்தினம் பெருஞ்சாணி அணையில் இருந்து உபரிநீர் மற்றும் பாசன கால்வாயில் 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதேபோல் மற்ற அணைகளில் இருந்தும் திறந்து விடப்பட்ட தண்ணீரால் ஆறுகள், கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோரம் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கனமழை, வெள்ளத்தால் ரப்பர் தோட்டங்கள், வாழைத்தோட்டங்கள், நெல் வயல்கள் போன்றவை தண்ணீரில் மூழ்கியுள்ளன. திற்பரப்பு அருவியில் காட்டாறாக வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியதால் நேற்று 7-வது நாளாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால் குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன. சில குளங்கள் நிரம்பி உடையும் தருவாயில் இருந்து வருகின்றன. சில குளங்களில் இருந்து மறுகால் பாயும் தண்ணீர் அருகில் உள்ள தோட்டங்கள், தோப்புகளுக்குள் புகுந்து பயிர்கள் மூழ்கியுள்ளன. நேற்று முன்தினம் வெள்ளத்தில் மூழ்கிய சாலைகளில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீர் வடிந்து வருகிறது. கிராமங்களை சூழ்ந்த வெள்ளமும் வடிந்து வருகிறது. தெரிசனங்கோப்பில் இருந்து அருமநல்லூர் செல்லும் சாலை நேற்றும் தண்ணீர் மூழ்கிய நிலையில் கிடந்தது. நாகர்கோவில் அருகே திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலில் மழைநீர் கொடிமரத்தை சுற்றி தேங்கி நின்றது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவில் இருந்து மழை கொஞ்சம், கொஞ்சமாக குறைந்தது. இதனால் பெருஞ்சாணி அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு நேற்று குறைக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லிமீட்டரில்) வருமாறு:-
பேச்சிப்பாறை- 45, பெருஞ்சாணி- 50, சிற்றார் 1- 54, சிற்றார் 2- 42, புத்தன் அணை- 54.2, முக்கடல்- 45, பூதப்பாண்டி- 28.2, களியல்- 13, கன்னிமார்- 35.2, கொட்டாரம்- 14.2, குழித்துறை- 52, திற்பரப்பு- 37.8, மயிலாடி- 11.4, நாகர்கோவில்- 20.2, சுருளக்கோடு- 54, தக்கலை- 26, குளச்சல்- 32, இரணியல்- 15.6, பாலமோர்- 59.6, மாம்பழத்துறையாறு- 28, குருந்தங்கோடு- 17, முள்ளங்கினாவிளை- 63, ஆனைக்கிடங்கு- 59.6 என்ற அளவில் மழை பதிவானது.
மழை குறைந்தாலும் அணைகளுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து இருந்து வருகிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் ஒரே நாளில் 13 அடி உயர்ந்து 37 அடியாக இருந்தது. அது நேற்று 37.80 அடியாக அதிகரித்தது. மதியம் இந்த அணைக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி இந்த அணைக்கு தண்ணீர் வரத்து 13 ஆயிரத்து 306 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 9,695 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் நீர்மட்டம் 38.40 அடியாக உயர்ந்தது.
பெருஞ்சாணி அணையில் இருந்து 4,718 கன அடி தண்ணீர் பாசனக்கால்வாய் மூலமாகவும், 4,368 கன அடி தண்ணீர் உபரிநீர் கால்வாய் மூலமாகவும் திறந்து விடப்பட்டது. நேற்று முன்தினம் இரவு இந்த அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரி நீராக வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 நாட்களாக உபரி நீர் அதிகளவு வெளியேற்றப்பட்டதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. 77 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலையில் 73.35 அடியாக இருந்தது. மாலை 4 மணி நிலவரப்படி இந்த அணைக்கு 5,340 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 3,952 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் நீர்மட்டம் 73.85 அடியாக உயர்ந்தது.
18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் நேற்று 15.88 அடியாக இருந்தது. அணைக்கு 1,692 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து உபரியாக 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 15.97 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீர் வரத்தும் இல்லை. திறப்பும் இல்லை. பொய்கை அணைக்கு 109 கன அடி தண்ணீர் வந்தது. 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கை அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 23 அடியாக இருந்தது. அது நேற்று 3½ அடி உயர்ந்து 26.50 அடியாக அதிகரித்திருந்தது.
நாகர்கோவில் நகருக்கு குடிதண்ணீர் வழங்கக்கூடிய முக்கடல் அணைப்பகுதியிலும் மிதமான மழை பெய்தது. இதனால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் 20 அடியாக இருந்த இந்த அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்து முழு கொள்ளளவான 25 அடி நீர்மட்டத்தை எட்டியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது என நகராட்சி என்ஜினீயர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

Related Tags :
Next Story