வாஜ்பாய் மரணம்: ஓசூரில் கடைகள் அடைப்பு; கல் வீச்சு
வாஜ்பாய் இறந்ததையொட்டி ஓசூரில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் அடைக்கப்படாத கடைகள் மீது மர்ம நபர்கள் கல் வீசினர்.
ஓசூர்,
பாரதீய ஜனதா கட்சியின் முதுபெரும் தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் நேற்று மரணம் அடைந்தார். இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஒரு கும்பல் கடைகளை அடைக்குமாறு வலியுறுத்தி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் ஒவ்வொரு கடையாக சென்று கடைகளை அடைத்து விட்டு வீட்டிற்கு செல்லுங்கள் எனக்கூறினர். இதையடுத்து பலரும் கடைகளை அடைத்து விட்டு சென்று விட்டனர்.
அடைக்கப்படாத ஒரு சில கடைகள் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர்கள் கடைகளை பூட்டி சென்றனர்.
இதைத் தொடர்ந்து ஓசூரில் 4 ரோடு, பாகலூர் சாலை, எம்.ஜி.ரோடு, நேதாஜி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு விட்டன. மேலும் ஓசூரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் நேற்று ஓசூரில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story