வாஜ்பாய் நம்முடன் இல்லை என்பதை இதயம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது உத்தவ் தாக்கரே உருக்கம்
வாஜ்பாய் நம்முடன் இல்லை என்பதை எனது இதயம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உருக்கமாக கூறியுள்ளார்.
மும்பை,
உடல் நல குறைவு காரணமாக டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்த இரங்கலில் கூறியிருப்பதாவது:-
வாஜ்பாய் நம்முடன் இல்லை என்பதை இன்னும் எனது இதயம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அவர் எப்போதும் நம் இதயத்தில் நிலைகொண்டிருப்பார். அவர் மிகவும் எளிமையான மனிதர், ஒரு அப்பாவி அரசியல்வாதி, அதிகாரத்தால் வரும் தீய குணங்கள் அவரிடம் இருந்து விலகியே நின்றன.
அவர் 3 முறை பிரதமராக இருந்திருக்கிறார். எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிறிய மற்றும் பெரிய கட்சிகள் உடன் இருக்கவேண்டும் என்று விரும்பினார். இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான மனோகர் ஜோஷி கூறுகையில், “ நாடாளுமன்ற சபாநாயகர் ஆவது நடக்காத ஒன்று என நான் கருதியிருந்தேன். நான் ஒருபோதும் அந்த பதவிக்கு வருவேன் என நினைத்ததில்லை. ஆனால் வாஜ்பாயின் நிலைப்பாடு எனக்கு உதவியது.
அவர் மட்டும் அந்த உறுதியான நிலைப்பாட்டை எடுக்காவிட்டால், நான் அந்த பதவியில் இருந்திருக்க மாட்டேன்.
அவர் அனைவருடன் நட்புடன் பழகியவர். அவர் முயற்சியால் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி 25 ஆண்டுகள் நீடித்தது. அவரை நிறைய முறை சந்தித்திருக்கிறேன். பலமுறை அவரின் பேச்சை கேட்டிருக்கிறேன். அவர் ஒரு வித்தியாசமான மனிதர்” என்றார்.
இதேபோல் சிவசேனா கட்சியினர் பலரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு தங்களின் இரங்கலை தெரிவித் துள்ளனர்.

Related Tags :
Next Story