கோவையை புறக்கணிக்கும் ரெயில்வே நிர்வாகம்: அட்டவணையில் புதிய சேவை பற்றிய அறிவிப்பு இல்லை
தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள அட்டவணையில் புதிய ரெயில்கள் பற்றிய அறிவிப்பு இல்லை. இதனால் கோவையை ரெயில்வே நிர்வாகம் புறக்கணித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை,
தென்னக ரெயில்வே கடந்த 14-ந் தேதி புதிய கால அட்டவணையை வெளியிட்டது. அந்த அட்டவணை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால் அந்த அட்டவனையில் மீண்டும் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. புதிய கால அட்டவணையில் ஒரு ஆண்டுக்கு மேலாக செயல்பாட்டில் உள்ள போத்தனுர்- பொள்ளாச்சி வழித்தடம் முற்றிலும் இடம் பெறவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியது.
இதுகுறித்து கோவை சமூக ஆர்வலர் ஜெயராஜ் கூறிய தாவது:-
மம்தா பானர்ஜி ரெயில் மந்திரியாக இருந்த காலத்தில் ரெயில்வே பட்ஜெட்டில் முறையாக அறிவிக்கப்பட்ட ரெயில் உள்பட தற்போது வரை இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் நிரந்தரமாக்கப்படவில்லை.
ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட செங்கோட்டை- புனலூர் ரெயில் பாதையில் நிரந்தர ரெயில்கள் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்து மீட்டர் கேஜ் ரெயில் பாதையில் சுமார் 90 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த பாரம்பரியமிக்க கோவை- ராமேஸ்வரம் மற்றும் கோவை- தூத்துக்குடி ரெயில்கள் அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு ஒரு ஆண்டுகளுக்கு மேலாகியும் புதிய கால அட்டவனையில் அந்த ரெயில்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை.
கோவை-பொள்ளாச்சி- பழனி-திண்டுக்கல் ரெயில் பாதையில் புதிய ரெயில்களை இயக்குவதற்கான எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை பயணிகளை ஏமாற்றமடைய செய்துள்ளது. அமிர்தா விரைவு ரெயில் உடுமலை மற்றும் ஒட்டன்சத்திரத்தில் நிற்காமல் செல்வது அந்த பகுதி மக்களை வேதனை அடைய செய்துள்ளது.
சென்னையில் இருந்து பழனி வரை இயக்கப்பட்டு வந்த பழனி எக்ஸ்பிரஸ் பாலக் காடு வரை நீட்டிப்பு செய்துள்ளது பழனி, ஒட்டன்சத்திரம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ரெயிலில் பாலக்காட்டுக்கு குறைந்த அளவிலேயே மக்கள் பயணம் செய்கிறார்கள்.
ஆனால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற கோவை- நெல்லை, செங்கோட்டை கோடைக்கால சிறப்பு ரெயில்கள் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. கோவை மக்களால் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக் கப்பட்டு வந்த பல ரெயில்கள் புதிதாக வெளியிடப்பட்டுள்ள அட்டவணையில் இடம் பெறாதது கோவையை புறக்கணிக்கும் செயலாகும்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்றால் கேரள மாநிலம் பாலக்காடு கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கிணத்துக் கடவு- பொள்ளாச்சி ரெயில் பாதையை சேலம் ரெயில்வே கோட்டத்துடன் இணைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story