தென்மேற்கு ரெயில்வே சார்பில் புதிய கால அட்டவணை வெளியீடு
தென்மேற்கு ரெயில்வே சார்பில் நேற்று புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டது. இதில் மைசூரு-தூத்துக்குடி ரெயிலின் நேரம் மாற்றப்பட்டு உள்ளது.
பெங்களூரு,
தென்மேற்கு ரெயில்வேக்கான புதிய கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இந்த புதிய கால அட்டவணையை தென்மேற்கு ரெயில்வே பொது மேலாளர் ஏ.கே.குப்தா மற்றும் அதிகாரிகள் வெளியிட்டனர்.
இந்த புதிய அட்டவணையானது சுதந்திர தினமான நேற்று முன்தினம் முதல் நடைமுறைக்கு வந்தது. புதிய அட்டவணைப்படி சில முக்கிய ரெயில்களின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-
மைசூரு-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ்
* மைசூருவில் இருந்து தினமும் மாலை 6 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு செல்லும் மைசூரு-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டிஎண்:16236) தற்போது மாலை 6.05 மணிக்கு புறப்படுகிறது. இதனால் இரவு 9 மணிக்கு பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்துக்கு வர வேண்டிய அந்த ரெயில் 5 நிமிடம் தாமதமாக இரவு 9.05 மணிக்கு பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்துக்கு வரும்.
* பெங்களுரு சிட்டி ரெயில் நிலையத்துக்கு இரவு 8.15 மணிக்கு வந்து அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு சென்ற சாம்ராஜ்நகர்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் (16220) தற்போது பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்துக்கு இரவு 8.20 மணிக்கு வந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
* சென்னப்பட்டணா- கோலார்(டெமு) ரெயில் (76525) இரவு 9 மணிக்கு பதில் இரவு 9.30 மணிக்கு கோலார் ரெயில் நிலையத்துக்கு செல்லும்.
* யஷ்வந்தபுரம்-மைசூரு பயணிகள் ரெயில் (56215) யஷ்வந்தபுரத்தில் இருந்து மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டு இரவு 8.05 மணிக்கு மைசூருவை சென்றடையும்.
* உப்பள்ளி-மைசூரு ஹம்பி எக்ஸ்பிரஸ் ரெயில் (16591) பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்துக்கு காலை 6.10 மணிக்கு வந்து 6.20 மணிக்கு புறப்பட்டு காலை 9.10 மணிக்கு மைசூருவை சென்றடையும்.
சென்னை-மைசூரு எக்ஸ்பிரஸ்
* சென்னை-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில்(22682) பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்துக்கு அதிகாலை 5.25 மணிக்கு வந்து, அங்கிருந்து 5.35 மணிக்கு புறப்பட்டு காலை 8.10 மணிக்கு மைசூருவை சென்றடையும்.
* ராமநகர்-கே.எஸ்.ஆர். பெங்களூரு (மெமு) ரெயில் (66540) ராமநகரில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு பெங்களூரு சிட்டியை வந்தடையும்.
*மாரிகுப்பம்-கே.எஸ்.ஆர். பெங்களூரு பயணிகள் ரெயில்(56507) பெங்களூரு ரெயில் நிலையத்துக்கு காலை 9.25 மணிக்கு வருவதற்கு பதில் காலை 9.10 மணிக்கு பெங்களூரு சிட்டியை வந்தடையும்.
* கே.எஸ்.ஆர். பெங்களூரு-கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் ரெயில் (16315) மாலை 5 மணிக்கு புறப்படுவதற்கு பதில் மாலை 4.50 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
* சேலம்-யஷ்வந்தபுரம் பயணிகள் ரெயில்(56241) யஷ்வந்தபுரத்துக்கு காலை 10.45 மணிக்கு வருவதற்கு பதில் காலை 11.15 மணிக்கு வரும்.
* கே.எஸ்.ஆர். பெங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (12608) பெங்களூருவில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படுவதற்கு பதில் காலை 6.32 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
* சென்னை-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (16021) அதிகாலை 4 மணிக்கு பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்துக்கு வந்து அதிகாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மைசூருவுக்கு காலை 6.40 மணிக்கு செல்லும்.
இந்த ரெயில்கள் உள்பட 116 ரெயில்களின் பயண நேரங்கள் மாற்றப்பட்டு உள்ளன. அத்துடன், கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி முதல் ஜூன் மாதம் 18-ந் தேதி வரை புதிதாக தொடங்கப்பட்ட 12 ரெயில்களின் விவரங்கள், வேகம் அதிகரிக்கப்பட்ட ரெயில்களின் விவரங்களும், வேகம் அதிகரிப்பால் அந்த ரெயில்களின் அட்டவணையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் விவரங்களும் குறிப்பிடப்பட்டு உள்ளன.

Related Tags :
Next Story