வந்தவாசி அருகே மின்சாரம் தாக்கி பெண் சாவு


வந்தவாசி அருகே மின்சாரம் தாக்கி பெண் சாவு
x
தினத்தந்தி 17 Aug 2018 3:15 AM IST (Updated: 17 Aug 2018 6:05 AM IST)
t-max-icont-min-icon

வந்தவாசி அருகே மின்சாரம் தாக்கியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வந்தவாசி, 

வந்தவாசி அருகே அதியனூர் காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மனைவி அஞ்சலை (வயது 53). இவர் நேற்று முன்தினம் அதிகாலை தனது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள மாட்டுகொட்டகையில் பால் கறக்க சென்றார். அப்போது சமீபத்தில் பெய்த பலத்தமழையின் காரணமாக மின் கம்பத்தில் இருந்து வீட்டுக்கு வரும் மின்வயர் அறுந்து தொங்கி கொண்டிருந்தது. இதனை கவனிக்காத அஞ்சலை அங்கு சென்றபோது அவர் மீது மின்வயர் பட்டது. இதில் மின்சாரம் தாக்கி அஞ்சலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அஞ்சலையின் மகன் ஆனந்தமுருகன் கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story