மழையில்லாமல் கடும் வறட்சி: நூற்றுக்கணக்கான ஏக்கர் கரும்பு பயிர் சருகாகி சேதம்


மழையில்லாமல் கடும் வறட்சி: நூற்றுக்கணக்கான ஏக்கர் கரும்பு பயிர் சருகாகி சேதம்
x
தினத்தந்தி 18 Aug 2018 4:00 AM IST (Updated: 18 Aug 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

வேப்பந்தட்டை பகுதியில் மழையில்லாமல் நிலவி வரும் கடும் வறட்சியால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு பயிர் சருகாகி சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந் துள்ளனர்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா பகுதிகளில் கடந்த சில வருடங் களாக பருவமழை போதிய அளவில் பெய்யாமல் ஏமாற்றி வருகிறது. அதாவது நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில், மழை பெய்யாமல் மேலோட்டமாகவே மழை பெய்துள்ளது. இதனால் தற்போது பெரும்பாலான ஊர்களில் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வேப்பந்தட்டை பகுதியில் கிணற்று பாசனம் மூலம் பயிரிடக் கூடிய விவசாயிகள் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், நூற்றுக்கணக் கான ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்தனர். தொடர்ச்சியாக போதிய மழை பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து தற்போது கிணறுகளில் தண்ணீர் வற்றி பெரும்பாலான கரும்பு பயிர்களுக்கு தண்ணீர் இரைக்க முடியாமல் பயிர்கள் அணைத்தும் காய்ந்து சருகாகி வருகிறது. மேலும் கடந்த 6 ஆறு மாதங்களாக உழைத்த உழைப்பு மற்றும் செய்த செலவுகள் வீணாகி விட்டதே என கரும்பு விவசாயிகள் பெரும் வேதனை யடைந்துள்ளனர். இதேபோல் பல வருடங்களாக வளர்த்து வந்த தென்னை மரங்களும் போதிய தண்ணீர் இல்லாமல் காய்ந்து விட்டதே என பெரும்பாலான விவசாயிகள் புலம்புகின்றனர். அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளாவில் மக்கள் வெள்ளத்தில் மிதப்பதையும், தமிழ்நாட்டில் காவிரியில் தண்ணீர் கரைபுரண்டோடி வீணாக கடலில் கலப்பதையும் பார்க் கும்போது வேதனையாக உள்ளது.

எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கரும்பு பயிர்களையும், தென்னை மரங்களையும் கணக்கீடு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story