சொத்து மதிப்பீட்டு படிவங்கள் விடுமுறை நாட்களிலும் வழங்கப்படும் மாநகராட்சி தகவல்
சொத்து மதிப்பீட்டு படிவங்கள் விடுமுறை நாட்களிலும் வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை,
சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து சுயமதிப்பீட்டு விவர அறிக்கையை வருகிற 31-ந்தேதிக்குள் தகுந்த படிவத்தில் வழங்கிட பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். ரிப்பன் மாளிகை, மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்கள் மற்றும் இணையதளம் மூலம் இதுவரை 6 லட்சத்து 10 ஆயிரத்து 110 சுயமதிப்பீட்டு விவர படிவங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 82,624 படிவங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்ட படிவங்களில் மாற்றம் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
மக்களின் வேண்டுகோளுக்கேற்ப சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களிலும் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் படிவங்களை பெற்றுக்கொண்டு விவரங்கள் தாக்கல் செய்ய சிறப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களிலும் இணையதளம் செயல்படும். எனவே இதனை பயன்படுத்தி சொத்து வரி சீராய்வு தொடர்பான சுயமதிப்பீட்டு விவர அறிக்கையை விரைவில் தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
Related Tags :
Next Story