முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம்: பா.ஜனதாவினர் மவுன ஊர்வலம்


முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம்: பா.ஜனதாவினர் மவுன ஊர்வலம்
x
தினத்தந்தி 18 Aug 2018 4:00 AM IST (Updated: 18 Aug 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் பா.ஜனதா கட்சியினர் வாஜ்பாய் உருவ படத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

திருவொற்றியூர்,

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் அடைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திருவொற்றியூரில் பா.ஜனதா கட்சியினர் மாவட்ட செயலாளர் ஜெய்கணேஷ் தலைமையில் வாஜ்பாய் உருவ படத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று தேரடியில் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

வடசென்னை மாவட்ட பா.ஜனதா சார்பில் வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ராயபுரத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை வரை மவுன ஊர்வலம் நடத்தினர். இதில் மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், செயலாளர் டி.சந்துரு, வி.சி.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மாதவரம் மண்டல பா.ஜனதா சார்பில் புழல் லட்சுமிபுரம் ரெட்டை ஏரியில் தொடங்கி விநாயகபுரம் பஸ் நிலையம் வரை மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதனால் ரெட்டை ஏரியில் இருந்து விநாயகபுரம் வரை சாலையின் இருபுறங்களிலும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. மவுன ஊர்வலம் முடிந்த பிறகு கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இந்த மவுன ஊர்வலத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் எம்.வி.சசிதரன், சென்னை சிவா, மாதவரம் மண்டல தலைவர் சரவணன், மண்டல பொறுப்பாளர் சேஷாத்திரி உள்பட ஏராளமான பா.ஜனதா கட்சியினர் கலந்து கொண்டனர்.

Next Story