அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
அரியலூர்,
அரியலூரை அடுத்துள்ள கருப்பூரில் விநாயகா கல்வியியல் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நிறுவனர் பாஸ்கர் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். விழாவில் கல்லூரி முதல்வர் வேல்முருகன், பூர்ணிமா மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல் அரியலூரில் உள்ள ஏ.கே.எம்., ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர் கதிர் கணேசன் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.
வி.கைகாட்டி அருகே உள்ள நாகமங்கலம் ஊராட்சியில் பாரிவள்ளல் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் தங்கவேல் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து பள்ளியில் கட்டுரை போட்டி, பேச்சு போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் ராமநாதன், பாரிவள்ளல் குழுமத்தினர் பரிசுகளை வழங்கினர்.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்துள்ள குழவடையான் கிராமத்தில் உள்ள கோகிலாம்பாள் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் தாளாளர் ராஜா அன்பழகன் தேசியகொடியை ஏற்றி வைத்து, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். தழுதாழைமேடு கிராமத்தில் உள்ள இந்திரா பப்ளிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளியின் தாளாளர் அய்யப்பன் தேசிய கொடி ஏற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். பாப்பாக்குடி கிராமத்தில் உள்ள எம்.ஆர்.வி. ராஜா உயர் நிலைப்பள்ளியின் தாளாளர் வெங்கடேசன் கொடி ஏற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இலக்கியமன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். மகாத்மா காந்தி ஆட்டோ தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். இந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் கொடி ஏற்றி வைத்து மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார்கள்.
பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். செயலாளர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். விழாவினை முன்னிட்டு மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் கவிதைப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிறுவனத்தலைவர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். இதில் மாணவ-மாணவிகள் வீணாக உண்டு கழித்து வாழ மாட்டோம், நாங்கள் அனைவரும் சாதித்து தேசத்தின் புகழை உயர்த்துவோம் என்று சுதந்திர தினவிழா உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியைகள் கோமதி, பிரமீளா, ஒருங்கிணைப்பாளர்கள் கலையரசி, மதுரா மற்றும் உடற்கல்வி ஆசிரியர் தினேஷ் ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக மாணவி தர்ஷினி மற்றும் கீர்த்தி வரவேற்றனர். முடிவில் மாணவி தர்ஷனா நன்றி கூறினார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அந்தூர் செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் சேது தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார். விழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற செஸ்போட்டி, கால்பந்து, கூடைப்பந்து ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பள்ளி முதல்வர் செந்தமிழ்ச்செல்வி வரவேற்றார். முடிவில் பள்ளி துணை முதல்வர் நாகராஜன் நன்றி கூறினார்.
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பெரம்பலூர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சாந்தா, சுய உதவிக்குழுக்களுக்கு அதிகளவில், கடன் வழங்கிய எசனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் குணசேகரனை பாராட்டி, சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை வழங்கினார். இதில் சந்திரகாசி எம்.பி., போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, இணைப்பதிவாளர் பெரியசாமி, துணைப்பதிவாளர் பாண்டித்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், தலைவருமான சீனிவாசன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களை சார்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் தமிழ், ஆங்கிலம், இந்தியில் சுதந்திர தினத்தை பற்றி பேசினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் கலைநிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. விழாவில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் துணை தலைவர் அனந்தலட்சுமி கதிரவன், செயலாளர் நீலராஜ், கல்வி நிறுவனத்தின் அறக்கட்டளை உறுப்பினர்கள் ராஜாபூபதஜீ, ராஜாசேகர், மணி, மருத்துவர்கள், முதல்வர்கள், துணை முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி வளாகத்தில் 72 மரக்கன்றுகளை கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், தலைவருமான சீனிவாசன் நட்டு வைத்தார்.

Related Tags :
Next Story