முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு: அரசியல் கட்சியினர் மவுன ஊர்வலம்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் மவுன ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்.
கோவில்பட்டி,
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் மவுன ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்.
கோவில்பட்டி
பா.ஜ.க. முதுபெரும் தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் மறைவையொட்டி, கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு அவரது உருவ படத்துக்கு பா.ஜ.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர தலைவர் வேல்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாலையில் மவுன ஊர்வலம் நடந்தது. கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலத்தில் இருந்து பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் ஊர்வலமாக புறப்பட்டு மெயின் ரோடு வழியாக சென்று, கோவில்பட்டி ரெயில் நிலையம் முன்பு வந்தடைந்தனர். தொடர்ந்து அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது.
கோவில்பட்டி ரோட்டரி சங்க அலுவலகத்தில் வாஜ்பாய் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சங்க தலைவர் பாபு, செயலாளர் ரவி மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கயத்தாறு
கயத்தாறு மேலபஜாரில் அலங்கரிக்கப்பட்ட வாஜ்பாயின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் மாலையில் மவுன ஊர்வலம் நடந்தது. கயத்தாறு மேல பஜாரில் இருந்து பா.ஜ.க.வினர், பொதுமக்கள் மவுன ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று, மீண்டும் மேல பஜாரை வந்தடைந்தனர். தொடர்ந்து அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது. பா.ஜ.க. நகர தலைவர் ஆதி நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எட்டயபுரம்
எட்டயபுரம் பட்டத்து விநாயகர் கோவில் முன்பு வாஜ்பாயின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் மதியம் அங்கிருந்து அனைத்து கட்சியினர், பொதுமக்கள் மவுன ஊர்வலமாக புறப்பட்டு, முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பட்டத்து விநாயகர் கோவில் முன்பு வந்தனர். தொடர்ந்து இரங்கல் கூட்டம் நடந்தது.
பா.ஜ.க. ஒன்றிய தலைவர் ராம்கி, நகர தலைவர் நாகராஜன், தி.மு.க. நகர செயலாளர் பாரதி கணேசன், லெனின்குமார், நகர காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்டு பொதுக்குழு உறுப்பினர் சேது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் வேலுச்சாமி, ம.தி.மு.க. நகர செயலாளர் காளிதாஸ், வர்த்தக சங்க செயலாளர் அய்யனார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கழுகுமலை
கழுகுமலை மேலவாசலில் இருந்து பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் மவுன ஊர்வலமாக புறப்பட்டு, முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் மேலவாசலை வந்தடைந்தனர். தொடர்ந்து அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது. பா.ஜ.க. தொண்டர்கள் 3 பேர் மொட்டை போட்டனர். பா.ஜ.க. ஒன்றிய தலைவர் சென்றாய பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம்
விளாத்திகுளம் பயணியர் விடுதி முன்பிருந்து அனைத்து கட்சியினர், பொதுமக்கள் ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று, பஸ் நிலையம் முன்பு வந்தடைந்தனர். தொடர்ந்து அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பிருந்து அனைத்து கட்சியினர், பொதுமக்கள் மவுன ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று, தேரடி திடலை வந்தடைந்தனர். தொடர்ந்து அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது.
பா.ஜ.க. நகர தலைவர் சரவணன், இந்து முன்னணி நகர பொதுச்செயலாளர் முத்துராஜ், மணி, ராமகிருஷ்ணன், அ.தி.மு.க. நகர செயலாளர் மகேந்திரன், தி.மு.க. நகர செயலாளர் வாள் சுடலை, தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உடன்குடி
உடன்குடி மெயின் பஜாரில் இருந்து அனைத்து கட்சியினர் மாலையில் மவுன ஊர்வலமாக புறப்பட்டு சத்தியமூர்த்தி பஜார், பஸ் நிலையம், கீழ பஜார் வழியாக சென்று, மீண்டும் மெயின் பஜாரை வந்தடைந்தனர். தொடர்ந்து அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது.
இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், பா.ஜ.க. மாவட்ட செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், ஒன்றிய தலைவர் திருநாகரன், நகர தலைவர் ஜெயகுமார், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாலசிங், நகர செயலாளர் ஜான் பாஸ்கர், அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் அம்மன் நாராயணன், வட்டார காங்கிரஸ் தலைவர் துரைராஜ் ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்திருப்பேரை
தென்திருப்பேரை பஸ் நிறுத்தத்தில் இருந்து அனைத்து கட்சியினர், பொதுமக்கள் மவுன ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பஸ் நிறுத்தம் வந்தடைந்தனர். தொடர்ந்து அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது. பா.ஜ.க. நகர தலைவர் குமரேசன், ஒன்றிய தலைவர் நாராயணராஜ், தி.மு.க. ஆனந்த், ம.தி.மு.க. முருகன், கூட்டுறவு சங்க தலைவர் குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆழ்வார்திருநகரியில் பா.ஜ.க. நகர தலைவர் இசக்கிமுத்து தலைமையில் வாஜ்பாயின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சாத்தான்குளம்
சாத்தான்குளம் புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப் பள்ளி முன்பிருந்து அனைத்து கட்சியினர், பொதுமக்கள் மவுன ஊர்வலமாக புறப்பட்டு சென்று காமராஜர் சிலை முன்பு வந்தனர். தொடர்ந்து அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது.
பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர் செல்வராஜ், நகர தலைவர் ராம்மோகன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜோசப், ம.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி மகாராஜன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் முத்துசுந்தரம், ஓய்வுபெற்ற ஆசிரியர் மகாபால்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தட்டார்மடம்
தட்டார்மடம் பஜாரில் வாஜ்பாயின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர் செல்வராஜ், இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் சக்திவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவைகுண்டம்
ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் முன்பிருந்து அனைத்து கட்சியினர், பொதுமக்கள் ஊர்வலமாக சென்று, மீண்டும் பஸ் நிலையம் முன்பு வந்தடைந்தனர். தொடர்ந்து அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது. பா.ஜ.க. ஒன்றிய தலைவர் சித்திரைவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story