பால்ய நண்பரிடம் ரூ.40 லட்சம் பறித்தவர் கைது சயானில் பதுங்கி இருந்தபோது போலீசில் சிக்கினார்


பால்ய நண்பரிடம் ரூ.40 லட்சம் பறித்தவர் கைது சயானில் பதுங்கி இருந்தபோது போலீசில் சிக்கினார்
x
தினத்தந்தி 18 Aug 2018 4:00 AM IST (Updated: 18 Aug 2018 3:29 AM IST)
t-max-icont-min-icon

பால்ய நண்பரிடம் இருந்து ரூ.40 லட்சம் பறித்தவர் சயானில் பதுங்கி இருந்த போது போலீசாரிடம் சிக்கினார்.

மும்பை, 

பால்ய நண்பரிடம் இருந்து ரூ.40 லட்சம் பறித்தவர் சயானில் பதுங்கி இருந்த போது போலீசாரிடம் சிக்கினார்.

ரூ.40 லட்சம்

மும்பையை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் நத்தா நாம்தேவ். கடந்த 8-ந் தேதி மற்ெறாரு நிறுவனத்தில் இருந்து ரூ.40 லட்சம் வாங்கி வரும்படி நிறுவன உரிமையாளர், நத்தா நாம்தேவிடம் கூறினார். இதன்படி அவர் அங்கு சென்று பணத்தை வாங்கிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது வழியில் அவரது பால்ய நண்பர் பாபு கர்காடே(32) என்பவரை சந்தித்தார். இதையடுத்து பேசி கொண்டிருந்த போது அவரது கையில் பணம் இருப்பதை பாபு கர்காடே அறிந்து கொண்டார். அவர் திடீரென நத்தா நாம்தேவ் கையில் இருந்த பணப்பையை பிடுங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.

போலீசில் சிக்கினார்

இதனால் அதிர்ச்சி அடைந்த நத்தா நாம்தேவ் சம்பவம் குறித்து பைகுல்லா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அவரின் செல்போனின் ரகசிய நம்பரை ஆய்வு செய்ததில் கர்நாடகாவிற்கு தப்பி சென்றது தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் மும்பை சயானில் உள்ள ஹில்வியூ சொசைட்டி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பாபு கர்காடேவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Next Story