நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: குதிரையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: குதிரையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 18 Aug 2018 3:30 AM IST (Updated: 18 Aug 2018 3:31 AM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததையடுத்து குதிரையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பழனி, 


பழனியை அடுத்த பாப்பம்பட்டி பகுதியில் குதிரையாறு அணை அமைந்துள்ளது. அணையின் மொத்த உயரம் 80 அடி ஆகும். கடந்த சில வாரங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கூக்கால் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 82 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது அணையில் 43.62 அடி வரை தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 2 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணைப்பகுதியில் உள்ள ஜமுக்காலப்பாறை நீர்வீழ்ச்சியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதே போல் பாலாறு-பொருந்த லாறு அணையின் மொத்த உயரமான 65 அடியில் தற்போது 33.20 அடி வரை தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. இந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

வரதமாநதி அணையில் அதன் மொத்த உயரமான 66 அடியில் தற்போது 52.43 அடி வரை தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 கன அடி நீர்வரத்து உள்ளது. இந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. 

Next Story