நாசவேலைக்கு பாகிஸ்தானில் பயிற்சி பெற்றதாக கைதான எலக்ட்ரீசியன் மீது குற்றப்பத்திரிகை


நாசவேலைக்கு பாகிஸ்தானில் பயிற்சி பெற்றதாக கைதான எலக்ட்ரீசியன் மீது குற்றப்பத்திரிகை
x
தினத்தந்தி 18 Aug 2018 4:00 AM IST (Updated: 18 Aug 2018 3:51 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானில் பயிற்சி பெற்றதாக கைதான எலக்ட்ரீசியன் மீது பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

மும்பை, 

மும்பை உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் பயிற்சி பெற்றதாக கைதான எலக்ட்ரீசியன் மீது பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

பாகிஸ்தானில் பயிற்சி

மும்பை ஜோகேஸ்வரியை சேர்ந்தவர் பைசல் மிர்சா (வயது32). எலக்ட்ரீசியன். இவர் கடந்த மார்ச் மாதம் துபாய் சென்றார். அங்கு தனது உறவினர் பாரூக் தேவடிவாலாவை சந்தித்தார். பின்னர் அவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.-யின் ஏஜெண்டு மற்றும் ஒரு பயங்கரவாத அமைப்பின் உதவியுடன் பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகருக்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார்.

அங்கு அவருக்கு மும்பை, குஜராத் மற்றும் உத்தரபிர தேசத்தில் நாசவேலைகளில் ஈடுபட தற்கொலை தாக்குதல், துப்பாக்கிகளை கையாள்வது உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது.

குற்றப்பத்திரிகை தாக்கல்

இதுபற்றி மராட்டிய பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த மே மாதம் மும்பை திரும்பிய பைசல் மிர்சாவை ேபாலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையின் போது, அவர் முக்கிய பிரமுகர்களை கொல்லவும், மக்கள் கூடும் இடங்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தவும், சதி திட்டத்தை தீட்டி அதற்கான உத்தரவுக்காக காத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங் கள் மற்றும் வெடிபொருட் களை ஏற்றி வருவதற்கு குஜராத் மாநிலம் காந்தி தாமை சேர்ந்த அலர்கா கான் (32) என்ற டிரைவர் பயன்படுத்தப்பட இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரையும் கைது செய்தனர்.

கைதான இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் சிறப்பு கோர்ட்டில் பைசல் மிர்சா மீது 1,155 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரி கையை தாக்கல் செய்தனர்.

Next Story