ஊருக்கு புதியவர் என கூறி நூதன மோசடியில் ஈடுபட்டு வந்த வாலிபர் கைது
ஊருக்கு புதியவர் என கூறி நூதன மோசடியில் ஈடுபட்டு வந்த வாலிபர் கைது செய்யப்பட்டாார்.
மும்பை,
ஊருக்கு புதியவர் என கூறி நூதன மோசடியில் ஈடுபட்டு வந்த வாலிபர் கைது செய்யப்பட்டாார்.
சிறுவனிடம் மோசடி
மும்பையை சேர்ந்த யாஷ் (வயது15) என்ற சிறுவன் சம்பவத்தன்று தாதர் ரெயில் நிலையம் அருகே நின்று கொண்டு இருந்தான். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் வந்தார். அந்த வாலிபர் டெல்லியில் இருந்து மும்பைக்கு வந்திருப்பதா கவும், அவரது செல்போன், பணப்பை காணாமல் போய்விட்டதாகவும் கூறினார். பின்னர் அவர் மும்பைக்கு புதிதாக வந்துள்ளதால் தனக்கு வழி எதுவும் தெரியவில்லை. எனவே சர்வதேச விமான நிலையம் வரை தன்னுடன் வருமாறு சிறுவனிடம் கூறினார்.
சிறுவனும் பரிதாபபட்டு அந்த வாலிபருடன் சென்றான். விமான நிலைய பகுதிக்கு சென்றவுடன் வாலிபர், தனது உறவினர் ஒருவருடன் பேச வேண்டும் என கூறி சிறுவனின் செல்போனை வாங்கி சென்றார்.
கைது
இந்தநிலையில் செல் போனுடன் சென்ற வாலிபர் திரும்பி வரவில்லை. இத னால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிறுவன் சம்பவம் குறித்து சகார் போலீசில் புகார் அளித்தான். போலீசார் வழக்குப்பதிவு செய்து விமானநிலைய பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த வாலிபரை தேடிவந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சர்வதேச விமான நிலையப்பகுதியில் வைத்து சிறுவனை ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் மங்கேஷ்(28) என்பதும், அவர் இதேபாணியில் 23 பேரிடம் செல்போன், பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டு, கடன் அட்டை ஆகியவற்றை பறித்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. போலீசார் அவரிடம் இருந்து கடன் அட்டைகள் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story