கல்யாண் அருகே, சிறுமியை மானபங்கம் செய்த 80 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது
கல்யாண் அருகே சிறுமியை மானபங்கம் செய்த 80 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தானே,
கல்யாண் அருகே சிறுமியை மானபங்கம் செய்த 80 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சிறுமி மானபங்கம்
தானே மாவட்டம் கல்யாண் அருகே உள்ள அம்பிவிலி பகுதியை சேர்ந்த முதியவர் யூனுஸ் செய்யது (வயது80). இவர் அந்த பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு கையில் கட்டுவதற்கு மந்திரித்த கயிறு தருவதாக கூறினார். இதை நம்பிய அந்த சிறுமி அந்த கயிறை வாங்குவதற்காக முதியவர் யூனுஸ் செய்யதுவின் வீட்டுக்கு சென்றாள்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட யூனுஸ் செய்யது சிறுமியை மானபங்கம் செய்து உள்ளார்.
முதியவர் கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தனது வீட்டுக்கு ஓடி வந்து தனது தாயிடம் சம்பவத்தை கூறி அழுதார். இதை கேட்டு பதறிப்போன சிறுமியின் தாய், மகளை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் சிறுமியை மானபங்கம் செய்த முதியவர் யூனுஸ் செய்யது மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story