அனுமதியின்றி செயல்பட்ட மணல் குவாரி மூடப்பட்டது - அதிகாரிகள் நடவடிக்கை
மெலட்டூர் அருகே அதிகாரிகளின் நடவடிக்கையால் அனுமதியின்றி செயல்பட்ட மணல் குவாரி மூடப்பட்டது.
மெலட்டூர்,
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகாவுக்கு உட்பட்ட மெலட்டூர் பகுதியில் தனியார் நிலத்தில் மணல் குவாரி செயல்படுவதாகவும், இங்கிருந்து எந்நேரமும் லாரிகளில் மணல் எடுத்து செல்வதால் கிராமமக்கள் சிரமப்படுவதாகவும் கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப்குமாருக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விசாரணை நடத்தும்படி பாபநாசம் தாசில்தாருக்கு உதவி கலெக்டர் உத்தரவிட்டார்.
இதையடுத்து பாபநாசம் தாசில்தார் மாணிக்கராஜ், மெலட்டூர் வருவாய் அதிகாரி கலையரசி மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது மெலட்டூர் நாலாம்சேத்தி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட காந்தாவனம் பகுதியில் அரசு அனுமதியின்றி மணல்குவாரி செயல்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். வருவாய்த்துறையினரின் வாகனத்தை பார்த்தவுடன் அங்கு மணல் ஏற்றுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த லாரிகள் அனைத்தும் அங்கிருந்து விரைவாக எடுத்து செல்லப்பட்டன.
குவாரியில் மணல் எடுக்க பயன்படுத்தி வந்த பொக்லின் எந்திரம் மட்டும் வருவாய்த்துறையினரிடம் சிக்கியது. அதனை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் காந்தாவனம் குடியானத்தெருவை சேர்ந்த சுப்பிரமணியனின் மகன்கள் முருகானந்தம், சச்சிதானந்தம் ஆகியோருக்கு சொந்தமான நிலத்தில் அரசு அனுமதியின்றி அளவுக்கு அதிகமாக ஆழம் தோண்டி மணல் எடுத்து வந்தது தெரிய வந்தது.
அதனையடுத்து அனுமதியின்றி செயல்பட்ட மணல் குவாரியை மூடவும், மணல் அள்ள பயன்படுத்திய பொக்லின் எந்திரத்தை பறிமுதல் செய்து மெலட்டூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கவும் வருவாய்த்துறையினருக்கு பாபநாசம் தாசில்தார் மாணிக்கராஜ் உத்தரவிட்டார். அதன்படி வருவாய்த்துறையினரின் நடவடிக்கையால் மணல் குவாரி மூடப்பட்டது.
இதையடுத்து மெலட்டூர் போலீசார் அனுமதி பெறாமல் மணல் குவாரி நடத்தி வந்த முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story