ஈரோடு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் கலெக்டர் பார்வையிட்டார்
ஈரோடு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதியில் கலெக்டர் பார்வையிட்டார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், பவானி, ஜம்பை, அம்மாபேட்டை, கருங்கல்பாளையம், கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் பவானி ஆறும், காவிரி ஆறும் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆற்றங்கரையோர பகுதி வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து கொண்டது. இந்த பகுதிகளை ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் நேற்று பார்வையிட்டார்.
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலும் நேற்று கலெக்டர் பார்வையிட்டார். அவருடன் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ.வும் உடன் வந்தார்.
நேற்று 9 வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் அங்கிருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். கிராம நிர்வாக அதிகாரிகள் அந்தந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். தண்ணீர் மட்டம் உயருவது குறித்து அவர்கள் கண்காணித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல்கள் அளித்தனர்.
தண்ணீர் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர், சத்தியமங்கலம், பவானி, கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 2 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 6 ஆயிரம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச்செல்லப்பட்டு உள்ளனர். 64 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு, குடிநீர், கழிப்பிட வசதிகள் முழுமையாக செய்யப்பட்டு இருக்கிறது. தண்ணீர் இன்னும் அதிகமாக வரும் என்ற நிலை இருப்பதால் தாழ்வான பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. தண்ணீர் சூழ வாய்ப்பு உள்ள பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச்செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பணியில் அனைத்து துறை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். தங்கும் முகாம்களில் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்ய தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
எனவே பொதுமக்கள் யாரும் ஆற்றங்கரைகளில் தாழ்வான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். குழந்தைகளை தண்ணீரில் விளையாட அனுமதிக்க வேண்டாம். இவ்வாறு கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறினார்.

Related Tags :
Next Story