வெள்ளப்பெருக்கால் மண் அரிப்பு: எந்த நேரத்திலும் கொள்ளிடம் பழைய இரும்பு பாலம் இடிந்து விழும் அபாயம்
வெள்ளப்பெருக்கால் மண் அரிப்பு ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் கொள்ளிடம் ஆற்றின் பழைய இரும்பு பாலம் உள்ளது. அங்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருச்சி,
காவிரி ஆற்றில் எப்போதெல்லாம் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறதோ, அதை உபரிநீராக வெளியேற்ற கொள்ளிடம் ஆறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 3 லட்சம் கன அடிக்கும் மேலாக முக்கொம்பு மேலணையில் இருந்து தண்ணீரை வெளியேற்ற முடியும். காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளும் இடம் என்பதால் அதற்கு கொள்ளிடம் என பெயர்வந்தது.
தற்போது கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. திருச்சியில் மழை இல்லாத நிலையில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த 24.11.2005 அன்று கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் கன அடிவீதம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதன்பிறகு தற்போதுதான் அதிகளவில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி கொள்ளிடம் இரும்பு பாலம் 1928-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. அந்த பாலம் பலவீனம் அடைந்துள்ளதால் கனரக வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட்டு இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ, கார்கள் செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டது. மேலும் அந்த பாலம் அருகிலேயே புதிய பாலம் கட்டப்பட்டு அது பயன்பாட்டில் இருந்து வருகிறது.
தற்போது கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால், மண் அரிப்பு ஏற்பட்டு, பழைய இரும்பு பாலத்தின் 18-வது தூண் பகுதியில் விரிசல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த பாலத்தில் முற்றிலுமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு நிரந்தரமாக தடுப்புச்சுவர் எழுப்பப்பட்டது. விரிசல் ஏற்பட்ட தூண் பகுதி படிப்படியாக கீழே இறங்கி வந்தது. நேற்று அது மேலும் சற்று கீழே இறங்கி ‘வி’ வடிவத்தில் காணப்பட்டது. தொடர்ந்து கொள்ளிடத்தில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் எந்த நேரத்திலும் பாலம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. தற்போது பாலத்தை ஒட்டிச்செல்லும் ராட்சத ‘கேபிள்’ வயர்களின் பலத்தால் பாலம் உடையாமல் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இடிந்து விழும் தருவாயில் உள்ள பாலத்தை காண நேற்று திரளான பொதுமக்கள் அங்கு கூடினர். சிலர் ஆர்வமிகுதியில் அருகில் உள்ள புதுப்பாலத்தில் நின்றபடி ‘செல்பி’ எடுத்து கொண்டனர். பழைய இரும்பு பாலத்தின் அருகில் செல்லாதபடி அங்கு போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Related Tags :
Next Story