காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியும் சீர்காழி பகுதியில் வறண்டு கிடக்கும் குளங்கள்
காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியும் சீர்காழி பகுதியில் உள்ள குளங்கள், வாய்க்கால்கள் வறண்டு கிடக்கின்றன. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி,
நாகை மாவட்டம் சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட காவிரி பாசன கடைமடை பகுதிகளான சீர்காழி, கொள்ளிடம், ஆணைக்காரன்சத்திரம், கோபாலசமுத்திரம், மாதானம், பழையபாளையம், அகரவட்டாரம், பச்சைபெருமாநல்லூர், ஓலையாம்புத்தூர், மாதிரவேளூர், குன்னம், கீரங்குடி, பனங்காட்டாங்குடி, அகரஎலத்தூர், அகணி, கொண்டல், வள்ளுவக்குடி, நெம்மேலி, புங்கனூர், வைத்தீஸ்வரன்கோவில், எடகுடிவடபாதி, சட்டநாதபுரம், புதுத்துறை, திருவெண்காடு, மங்கைமடம், பெருந்தோட்டம், கீழசட்டநாதபுரம், நாங்கூர், கதிராமங்கலம், திருநகரி, எடமணல், திருமுல்லைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எக்டேரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யப்பட்டு வந்தன. இந்தநிலையில் கடைமடை பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக முழுமையாக காவிரி நீர் வராததால், இங்குள்ள பெரும்பான்மையான விளை நிலங்கள் தரிசு நிலங்களாகவே காணப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக பொதுப்பணித்துறையினர், சீர்காழி பகுதியில் உள்ள தெற்குராஜன் வாய்க்கால், ராஜன் வாய்க்கால், புத்தூர் வாய்க்கால், பெரிய வாய்க்கால், சின்ன வாய்க்கால், புதுமன்னியாறு, பொறைவாய்க்கால், கழுமலையாறு வாய்க்கால், திருநகரி வாய்க்கால், கோவிந்தன்காவிரி வாய்க்கால், மண்டவாய்க்கால், பழவாறு வாய்க்கால், ஊசி வாய்க்கால், நடுவாய்க்கால், பாப்பான் ஓடைவாய்க்கால், சிங்காரன் வாய்க்கால் உள்ளிட்ட முக்கிய பாசன வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரவில்லை. இதனால் பல்வேறு பாசன வாய்க்கால்கள் செடி-கொடிகள் மண்டி தூர்ந்து போய்விட்டன. பல்வேறு வாய்க்கால்களில் உள்ள மதகுகள், ஷட்டர்கள் பழுதடைந்துள்ளன. மேற்கண்ட பாசன வாய்க்கால்களை தூர்வாரக்கோரி சீர்காழி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் பலமுறை புகார் செய்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் சீர்காழி நகர் பகுதியில் உள்ள காந்தி பூங்கா குளம், கரிக்குளம், அய்யனார்குளம், தென்பாதி திருவேங்கடம்பிள்ளை குளம், அரியாப்பிள்ளைகுளம், தாடாளன் பெருமாள் கோவில் குளம், தாமரைக்குளம் உள்பட 1000-க்கும் மேற்பட்ட குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. ஆனால் கடந்த ஒரு வாரமாக அளவுக்கு அதிகமாக தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த தண்ணீரை தேக்க தடுப்பணை இல்லாததால் வீணாக கடலில் கலக்கிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியும்கூட சீர்காழி பகுதியில் உள்ள பாசன வாய்க்கால்களும், குளங்களும் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. இது எங்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. கடை மடை பகுதிக்கு தண்ணீர் வராததால் இந்த பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாக உள்ளது.
எனவே தமிழக அரசு, காவிரி ஆற்றில் தடுப்பணைகளை அமைத்து தண்ணீரை தேக்க வேண்டும். சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்க வாய்க்கால்களையும், குளங்களையும் தூர்வார வேண்டும். அவ்வாறு அரசு செய்யவில்லை என்றால் நாங்கள் விவசாயத்தை தவிர்த்து மாற்று தொழிலை தேடி செல்ல வேண்டிய நிலை தான் ஏற்படும் என்றனர்.

Related Tags :
Next Story