குடகில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 32 பொக்லைன் எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன மந்திரி எச்.டி.ரேவண்ணா பேட்டி

குடகில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 32 பொக்லைன் எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன  மந்திரி எச்.டி.ரேவண்ணா பேட்டி
x
தினத்தந்தி 19 Aug 2018 4:00 AM IST (Updated: 19 Aug 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

குடகில் மீட்பு பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை சார்பில் 32 பொக்லைன் எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக மந்திரி எச்.டி.ரேவண்ணா கூறினார்.

ஹாசன், 

குடகில் மீட்பு பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை சார்பில் 32 பொக்லைன் எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக மந்திரி எச்.டி.ரேவண்ணா கூறினார்.

5 ஆயிரம் லிட்டர் பால்

ஹாசன் டவுனில் உள்ள அரசுக்கு சொந்தமான பால்பண்ணையில் இருந்து குடகிற்கு 5 ஆயிரம் லிட்டர் பால், 3 ஆயிரம் பிஸ்கட் பாக்கெட்டுகள் 3 லாரிகள் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. குடகுக்கு புறப்பட்ட சென்ற லாரிகளை கர்நாடக பொதுப்பணித்துறை மந்திரியும், பால்பண்ணையின் தலைவருமான எச்.டி.ரேவண்ணா கொடியசைத்து அனுப்பி வைத்தார். இதன்பிறகு மந்திரி எச்.டி.ரேவண்ணா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கனமழை காரணமாக குடகு மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள மக்களுக்காக 5 ஆயிரம் லிட்டர் பால், 3 ஆயிரம் பிஸ்கட் பாக்கெட்டுகள், 200 குவிண்டால் அரிசிகள், 5 குவிண்டால் பருப்புகள், சமையல் எண்ணெய், துணிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

32 பொக்லைன் எந்திரங்கள்

மேலும் பால்பண்ணையில் வேலை செய்யும் ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் ரூ.10 லட்சமும் குடகு மாவட்ட மக்களுக்கு நிதியாக கொடுக்கப்பட்டு உள்ளது. குடகில் மீட்பு பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை சார்பில் 32 பொக்லைன் எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story