பிளாஸ்டிக்கை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் கலெக்டர் கதிரவன் வேண்டுகோள்
பிளாஸ்டிக்கை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கலெக்டர் கதிரவன் கேட்டுக் கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் ஆலப்பட்டி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. இதில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், டெங்கு காய்ச்சலை தடுத்தல், ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் பயன்படுத்துதல் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும் ஊர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் கதிரவன் பேசியதாவது:-
கிராம சபை கூட்டம் மக்களுக்கு என்ன தேவைகள் என்பது குறித்து உள்ளாட்சிகள் அமைப்பின் மூலம் மத்திய, மாநில அரசுகளின் நிதியின் மூலம் நலத்திட்டங்கள் செய்து வருகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பது குறித்தும் விழிப்புணர்வு செய்து வருகிறது. பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். மாற்றாக வாழை இலை, வாழை பட்டைகள் மற்றும் துணிப்பை ஆகியவற்றை பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும்.
இப்பகுதி மக்கள் 100 நாள் வேலைவாய்ப்பு வழங்க கோரிக்கை வைத்துள்ளர்கள். இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு இப்பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணிகள், பள்ளி கட்டிடம், தடுப்பனை மற்றும் சாலை வசதி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். விவசாய பயன்பாட்டுக்கு சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்தி குறைவான தண்ணீரில் அதிக அளவு உற்பத்தி பெருக்கி கொள்ள வேண்டும். ஒகேனக்கல் குடிநீரை மார்ச் ஏப்ரல் மாதங்களுக்குள் அனைத்து கிராமங்களிலும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதியோர் ஓய்வூதிய தொகை தகுதியுள்ள பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் செங்குட்டுவன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் நரசிம்மன், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சரவணன், வேளாண்மை துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சுசீலா, திட்ட அலுவலர் உமா மகேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன் விஜயகுமார், கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராயக்கோட்டை ஊராட்சி எச்சம்பட்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் தலைமை தாங்கினார். வேப்பனப்பள்ளி தி.மு.க. எம்.எல்.ஏ. முருகன் கலந்து கொண்டார். அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து ராயக்கோட்டை வழியாக தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை வரை புதிதாக 6 வழிச்சாலை அமைப்பதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் பழைய சாலையில் விரிவாக்கம் மேற்கொள்ள வேண்டும். ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி பகுதியில் ஊருக்குள் சாலை விரிவாக்கம் மேற்கொள்ளாமல், புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் கணேசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் அரியப்பன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சின்னராஜ், எச்சம்பட்டி ஊர்கவுண்டர் பொன்னுசாமி, முன்னாள் வார்டு உறுப்பினர் சின்னராஜ், ஊராட்சி செயலாளர் சந்திரகுமார் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதே போல வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேப்பனப்பள்ளி, சிகரமகனப்பள்ளி, நாச்சிகுப்பம், நேரலகிரி, மாதேப்பள்ளி ஆகிய கிராமங்களில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
கொத்தகொண்டப்பள்ளி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் வெங்கடேஷ் வரவேற்றார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். இதில் மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் முனிராஜ், ஓ.முனிராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வேணுகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story