மின்சாரம் தாக்கி ஓய்வுபெற்ற ஆசிரியர் சாவு


மின்சாரம் தாக்கி ஓய்வுபெற்ற ஆசிரியர் சாவு
x
தினத்தந்தி 19 Aug 2018 4:15 AM IST (Updated: 19 Aug 2018 3:25 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே மின்சாரம் தாக்கியதில் ஓய்வு பெற்ற ஆசிரியர் இறந்தார்.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே உள்ள வாக்கூர் பகண்டை என்ற கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 62), ஓய்வுபெற்ற ஆசிரியர். இவருக்கு சொந்தமான நிலம் அதே கிராமத்தில் உள்ளது. தற்போது அந்த நிலத்தில் கரும்பு பயிர் செய்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை நிலத்திற்கு சென்று விட்டு வருவதாக குமார், தனது வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றார். அப்போது அங்கு பலத்த காற்றினால் அறுந்து கீழே விழுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் குமார் மிதித்துவிட்டார்.

இதில் மின்சாரம் தாக்கியதில் குமார் தூக்கி வீசப்பட்டு மயங்கி கிடந்தார். இதை அந்த வழியாக நடந்து சென்ற பக்கத்து நிலத்துக்காரர் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அவர், அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் குமாரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story