கேரள மழை, வெள்ள நிவாரணத்துக்கு மராட்டிய காங். எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்குகின்றனர்

கேரள மழை, வெள்ள நிவாரணத்துக்கு மராட்டிய காங். எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்குகின்றனர்
x
தினத்தந்தி 19 Aug 2018 4:30 AM IST (Updated: 19 Aug 2018 4:30 AM IST)
t-max-icont-min-icon

கேரள மழை, வெள்ள நிவாரணத்துக்கு மராட்டிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்கு வதாக, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் தெரிவித்தார்.

மும்பை, 

கேரள மழை, வெள்ள நிவாரணத்துக்கு மராட்டிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்கு வதாக, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் தெரிவித்தார்.

எம்.எல்.ஏ.க்கள்

மராட்டிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல், டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “ கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி, வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள கேரள மக்களுக்கு ஆதரவாக இருந்து தங்களால் முடிந்த அனைத்து உதவி களையும் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி காங்கிரஸ் கட்சியின் மராட்டிய எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் அனைவரும் தங்கள் ஒருமாத சம்பளத்தை கேரள மக்களுக்கு நிவாரணமாக வழங்க முடிவு செய்து ள்ளோம்” இவ்வாறு அவர் கூறினார்.

சிவசேனா எம்.பி.க்கள்

இதேபோல் சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராகுல் செவாலே மற்றும் காந்த் ஷிண்டே ஆகி யோரும் தங்கள் ஒரு மாத சம்பளத்தை கேரளாவுக்கு நிவாரணமாக வழங்கியுள் ளனர்.

மராட்டிய மந்திரியும், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான ரவீந்திர சவான் மற்றும் கல்யாண்- டோம்பிவிலி மாநகராட்சி கவுன்சிலர்களும் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்கியுள் ளனர்.

Next Story