5¾ லட்சம் குழந்தைகளுக்கு ‘வைட்டமின் ஏ’ வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நாளை முதல் 25-ந்தேதி வரை நடக்கிறது
குழந்தைகளுக்கு ‘வைட்டமின் ஏ’ மருந்தை வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து உள்ளது.
சென்னை,
6 மாதம் முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ‘வைட்டமின் ஏ’ மருந்தை வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து உள்ளது.
இதன்படி பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் ஆரம்ப சுகாதார மையங்கள், மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட மையங்களில் ‘வைட்டமின் ‘ஏ’ மருந்து கொடுக்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாம் நாளை(திங்கட்கிழமை) முதல் 25-ந்தேதி வரை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். முகாமில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ‘வைட்டமின் ஏ’ மருந்து கொடுக்கப்படும். இந்த முகாம் மூலம் 5 லட்சத்து 73 ஆயிரத்து 252 குழந்தைகள் பயனடைவார்கள்.
பெருநகர சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்த இந்த சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்கள் தங்களின் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ‘வைட்டமின் ஏ’ மருந்தை கொடுத்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
Related Tags :
Next Story