உன் பார்வையை மாற்று.. வரும் தலைமுறைக்கு வழிகாட்டு..
பெண்ணுக்கு பெருமைகொடுத்து, பெண்மையை பூரிக்கச் செய்யும் விதத்தில் ஒலிக்கிறது இந்த பாட்டு.
‘உயிர்த்துளி’ என்ற தலைப்பில், தாய்ப்பாலின் சிறப்பை இனிமையாய் செவிக்கு தருகிறது, இது.
பாடல் வரிகள்:
தாய் போல தெய்வம் ஏது..
தாய்ப் பால் போல துவக்கம் ஏது..
பாசத்தோடு புகட்டிப் பாரு..
இது பச்சப்புள்ள வளரும் வேரு..
தாய்மை தாய்மை அதில் வழியும் அமுதாம்..
பார்வை பார்வை அதை மாற்றுவது அழகாம்..
உன் தாய் அவள் அன்று உனக்குத் தந்ததே..
இன்று அவள் தன் சிசுக்குத் தருகிறாள்..
உன் பார்வையை நீ மாற்று..
வரும் தலைமுறைக்கு வழிகாட்டு..
அர்த்தம் நிறைந்த இந்த பாட்டு தாய்ப்பாலின் சிறப்பை உணர்த்துவதோடு, ‘பொதுஇடங்களில் பெண்கள் பால் புகட்டும்போது, ஆண்கள் உறுத்தும் பார்வையை தவிர்க்்கவேண்டும்’ என்றும் எடுத்துரைக்கிறது.
இந்த பாடலுக்கு சொந்தக்காரர் ரம்யா ராமச்சந்திரன். வயது 27. திருமணமாகாதவர். இவர் மருத்துவம் சார் சத்துணவு மற்றும் உணவியல் நிபுணர். அந்த துறையில் எம்.எஸ்சி. மற்றும் தாய்ப்பால் சிறப்புக் கல்வி பயின்றவர். தாய்ப்பால் விழிப்புணர்வு தொடர்புடைய ஏராளமான கருத்தரங்குகளில் பங்கு பெற்றுள்ளார். அது பற்றிய கருத்தரங்கமும் நடத்தியுள்ளார்.
“மனித வாழ்க்கைக்கு உணவே பிரதானம் என்பதால், அதை பற்றி விஞ்ஞானரீதியாக கற்றுக்கொள்ள கல்லூரிக் கல்வியில் உணவியலை பாடமாக தேர்ந்தெடுத்து படித்தேன். பின்பு அதில் பட்ட மேற்படிப்பை முடித்ததும் எனக்கு மிக சிறந்த அனுபவங்கள் கிடைத்தன. பிரசவித்த தாய்மார்கள் ஏராளமானவர்களோடு பழகும் வாய்ப்பும் கிடைத்தது. அப்போதுதான் தாய்ப்பால் புகட்டுவதில் பொது இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் சிரமங்களை உணர்ந்தேன். அதை அடிப்படையாகக்கொண்டுதான் இந்த ‘உயிர்த்துளி’ பாடலை எழுதினேன். வசந்த் என்ற நண்பரின் பங்களிப்பும் இதில் நிறைய உண்டு. இந்த பாடல் மக்களிடம் பெருமளவு போய் சேர்ந்திருப்பது அதிக மகிழ்ச்சி தருகிறது” என்று கூறும் ரம்யா ராமச்சந்திரனுடன் நமது உரையாடல் தொடர்கிறது..!
தாய்ப்பால் விழிப்புணர்வுக் கருத்தை நீங்கள் பாடலாக்கி பயன்படுத்த என்ன காரணம்?
“பாட்டு வடிவில் நாம் சொல்லும் கருத்துக்கள் இசை மூலமாக மக்கள் மனதில் எளிதில் பதி்யும். கருத்தரங்குகளில் மக்கள் கவனம் குறைகிறது. கலந்து கொள்ளும் மக்களுக்கு மட்டுமே அவை பலன் தருகின்றன. பாடல்களை எல்லா இடத்திலும், எப்போதும் ஒலிபரப்பக்கூடிய சூழல் இருக்கிறது. ‘இந்தியன் டயடெட்டிக் அசோசியேஷன்’ என்ற அமைப்பு நடத்திய ஆங்கில கட்டுரைப் போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. அந்த கட்டுரையில் இருந்த கருத்துக்களைதான் பாடல் வரிகளாக மாற்றினேன். இந்த பாடல் சி.டி. நான்கு நிமிடங்கள் ஓடும். ஆனந்த் அரவிந்தாக்ஷன் பாடியுள்ளார்”
பொதுவாக எந்த வயதில் இருந்து பெண்களுக்கு தாய்ப்பால் விழிப்புணர்வு பற்றி கற்றுத்தர வேண்டும்?
“வளரிளம் பருவமாக குறிப்பிடப்படும் 15 வயதில் இருந்து பெண்களுக்கு இதை கற்றுக் கொடுக்கலாம். அப்போது அவர்களுக்கு மார்பக வளர்ச்சி உருவாகியிருக்கும். அதன் வளர்ச்சியை உடலியல் விஞ்ஞானமுறையில் விளக்கி, அதில் ஏற்படும் மாற்றங்களையும் எடுத்துச்சொல்லவேண்டும். தாய்ப்பால் உற்பத்தியாகும் முறையையும் சொல்லிக்கொடுக்கலாம். பதினைந்து வயதில் சொல்லிக்கொடுத்தால், அவர்களுக்கு தங்கள் உடல் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படும். கல்லூரி மாணவிகளுக்கு தாய்ப்பால் பற்றி ஆழமாக சொல்லித்தரவேண்டும். கல்லூரியில் அதை ஒரு பாடத்திட்டமாகவும் ஆக்கவேண்டும்”
தாய்ப் பால் புகட்டுவது பெண்களின் உரிமை. அப்படி இருக்க பொதுஇடங்களில் பெண்கள் தாய்ப்பால் புகட்ட ஏன் தயங்கவேண்டும்?
“தாய்மார்கள் நல்ல மனநிலையில் இருந்து, மிக அமைதியான முறையில் பால்புகட்டவேண்டும். அதுதான் தாய்க்கும், குழந்தைக்கும் நல்லது. ஆனால், பொது இடங்களில் அதற்கான சூழல் இன்னும் மேம்படவில்லை. சில ஆண்களின் பார்வையில் விரசம் இருக்கிறது. அது பெண்களுக்கு தயக்கத்தையும், மனசஞ்சலத்தையும் ஏற்படுத்துகிறது. பச்சிளம் குழந்தை பசியில் துடிக்கும்போது, அதன் பசியாற்ற தேவையான சூழ்நிலை அமையாதபோது தாய்மார்கள் மிகுந்த மனஅழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்”
இதில் ஆண்கள் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்?
“ஒரு பெண் பாலூட்டும்போது ஆண், அந்த பெண்ணை தனது தாயின் நிலையில்வைத்து பார்க்கவேண்டும். தான் குழந்தையாக இருந்தபோது தனது தாய் இப்படித்தான், இதைத்தான் புகட்டினார். இப்போது அதுபோல் ஒரு தாய் தன் குழந்தையின் பசியை ஆற்றிக்கொண்டிருக்கிறார் என்ற சிந்தனைதான் ஒவ்வொரு ஆணுக்கும் உருவாகவேண்டும். உருவாகினால், அவர் வேலையை அவர் பார்த்துக்கொண்டு போய்விடுவார். பாலூட்டும் எந்த பெண்ணையும் உற்றுப்பார்க்கமாட்டார். இதைதான் ஒவ்வொரு ஆணிடமும் பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்”
திருமணமாகாத, தாயாகாத நீங்கள் தாய்ப்பால் புகட்டுவது பற்றி விளக்கும்போது, எந்த தாயாவது அது பற்றி கேள்வி எழுப்பியிருக்கிறாரா?
“நாம் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் நமக்கு தாய்ப்பால் புதிதில்லை. நாம் அதை ருசித்துத்தான் வளர்ந்திருக்கிறோம். அதன் சிறப்பு நம் அனைவருக்கும் தெரியும். அதே நேரத்தில் அது பற்றிய கல்வியை நான் கற்றிருப்பதால் விஞ்ஞானரீதியாக அதை என்னால் அணுகமுடிகிறது. டெல்லியில் இதற்கான சிறப்பு பயிற்சியினை பெற்றேன். நூறுக்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு பாலூட்டும் விதம் பற்றி விளக்கம் அளித்திருக்கிறேன். அவர் களுக்கு பிரசவித்த குழந்தையை தூக்கும் முறை, மார்போடு சேர்க்கும் முறை, பாலூட்டும்போது தாயின் மார்பும்- குழந்தையின் வாயும் செயல்பட வேண்டிய முறை போன்ற பல விஷயங்களை பயிற்சியாக சொல்லிக் கொடுத்திருக்கிறேன். கல்வியும், அதை சார்ந்த அனுபவமுமே இப்போதைக்கு நான் விழிப் புணர்வு கொடுக்க போதுமானதாக இருக்கிறது. அதனால் வேறு விதமான கேள்விகள் எழ வாய்ப்பில்லாமல் போய்விட்டது”
தாய்ப் பால் புகட்டினால் அழகு கெட்டுவிடும் என்ற அறியாமை பெண்களிடம் இருந்து நீங்கிவிட்டதா?
“அந்த அறியாமை நீங்கிவிட்டது. தாய்ப்பால் கொடுத்தால் அழகு அதிகரிக்கும், அன்பு அதிகரிக்கும் என்ற உண்மையை பெண்கள் உணர்ந்து விட்டார்கள். எனக்கு தெரிந்து 7 வயது சிறுவனுக்குகூட அவனது தாயார் பால் புகட்டிக் கொண்டிருக்கிறார். தேவை இருக்குமானால் பால் சுரந்துகொண்டே இருக்கும்”
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் என்ன மாதிரியான விசேஷ உணவுகளை சாப்பிடவேண்டும்?
“தாயின் ஆரோக்கியத்திற்கு தேவையான உணவு மட்டும் போதுமானது. விசேஷ உணவு எதுவும் தேவையில்லை. தாய்ப் பாலை சுரக்கச் செய்வதும், வெளியே அனுப்புவதும் ஹார்மோனின் வேலை. ப்ரோலாக்டின் பாலை உற்பத்தி செய்கிறது. ஆக்சி டாக்சின் பாலை வெளியேற்றுகிறது. இந்த இரண்டும் ஒழுங்காக வேலை செய்ய தனிப்பட்ட உணவு எதுவும் தேவையில்லை. தாய் மன நிம்மதியாக இருந்தாலே போதுமானது”
ஒரு தாய், இன்னொரு பெண் பெற்றெடுத்த குழந்தைக்கு பால் புகட்டுவது பற்றி..?
“அது வரவேற்கத்தகுந்த விஷயம்தான். அதே நேரத்தில் பாலை பற்றிய சில அபூர்வ விஷயங்களை நாம் புரிந்துகொள்ளவேண்டும். பால் குடிக்கும் குழந்தைக்கு தாகம் ஏற்பட்டால், அதற்கு தக்கபடி அந்த தாயிடம் இருந்து சுரக்கும் பால் தண்ணீர்தன்மையுடன் வரும். அதற்கு ஆஸ்மோரிசப்டர்ஸ் என்பது துணைபுரிகிறது. தாய் தான் பெற்ற குழந்தைக்கு தொடர்ந்து பாலூட்டும்போது, அது எத்தனை மாத குழந்தையோ அதற்கு தக்கபடியான தன்மைகளோடு தாயிடம் இருந்து பால் சுரக்கும். அதனால் பெற்ற தாயிடம் இருந்து குழந்தை நேரடியாக குடிக்கும் பாலே முழுமையானதாக இருக்கும். அடு்த்த குழந்தைக்கு கொடுக்கும்போது தேவை நிறைவேற்றப்படும். ஆனால் முழு பலன் கிடைக்காது. இன்னொரு விஷயம், இன்னொரு பெண்ணிடம் இருந்து வேறொரு குழந்தை பால் குடித்தால், அந்த பெண்ணிடம் இருக்கும் நோய் அந்த குழந்தையை தாக்கக் கூடும். இந்த விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. அதுபோல் பாலை பம்ப் மூலம் எடுப்பதும், சேகரிப்பதும் தாய்க்கு வலியான அனுபவமாக அமைந்துவிடக்கூடாது. சேமித்து வழங்கப்படும் பாலில் சத்துக்களும் முழுமையாக இருப்பதற்கு வாய்ப்பில்லை..”
ஜிலு ஜோசப் என்ற கேரள மாடல், குழந்தைக்கு பால் புகட்டுவது போன்ற படம் பிரபல மலையாள இதழின் அட்டையில் இடம் பெற்றது. அது சர்ச்சையை உருவாக்கியது. அதை பற்றி உங்கள் கருத்து என்ன?
“தாய்ப்பால் புகட்ட எந்த பெண்ணும் தயங்கவேண்டியதில்லை என்பதையும், அது பெண்ணின் ஏகபோக உரிமை என்பதையும் அது போன்ற காட்சிகள் உணர்த்துகிறது. அதன் மூலம் பொது இடங்களில் வைத்தும் பெண்கள் பாலூட்ட முன்வருவார்கள். அதே நேரத்தில் விழிப்புணர்வு என்ற பெயரில் நாம் எடுக்கும் எந்த முயற்சியும் முகசுளிப்பை ஏற்படுத்தும் விதமாகவோ, பப்ளிசிட்டிக்கான விஷயமாகவோ ஆகிவிடக்கூடாது” என்றார்.
மருத்துவம் சார் சத்துணவு மற்றும் உணவியல் நிபுணர் ரம்யா ராமச்சந்திரன் சென்னையை சேர்ந்தவர். இவரது பெற்றோர்: ராமச்சந்திரன்- தீபா.

Related Tags :
Next Story