விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 20 Aug 2018 4:00 AM IST (Updated: 20 Aug 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று மதியம் பெரம்பலூரில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வக்கீல் அணியின் மாநில துணைச்செயலாளர் சீனிவாசராவ் தலைமையில், கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் பெரம்பலூர் மாவட்ட துணை அமைப்பாளர் மணிவண்ணன் மற்றும் குன்னம் தாலுகா நல்லறிக்கை கிராமத்தில் உள்ள கட்சியினர் நேற்று மதியம் பெரம்பலூரில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் கடந்த 17-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு நல்லறிக்கை கிராம பஸ் நிலைய பகுதியில் திருமாவளவனை வாழ்த்தி பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. அதனை சிலர் கிழித்துள்ளனர். எனவே பதாகைகளை கிழித்தவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். 

Next Story