காரிமங்கலம் அருகே டிரான்ஸ்பார்மரில் ரூ.1 லட்சம் மதிப்பிலான ஆயில் திருட்டு போலீசார் விசாரணை


காரிமங்கலம் அருகே டிரான்ஸ்பார்மரில் ரூ.1 லட்சம் மதிப்பிலான ஆயில் திருட்டு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 20 Aug 2018 3:45 AM IST (Updated: 20 Aug 2018 2:09 AM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே டிரான்ஸ்பார்மரில் ரூ.1 லட்சம் மதிப்பிலான ஆயில் திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மின்வாரியத்தில் பெரியமிட்டஅள்ளி டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டு சுற்று வட்டார பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பெரியமிட்டஅள்ளி மின்வாரிய கட்டுப்பாட்டில் உள்ள டிரான்ஸ்பாபர்மர் ஒன்றில் அடிக்கடி மின்சப்ளை நிற்காமல் இருந்து வந்துள்ளது.

அதைத்தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் அந்த டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்கும் வேலையில் ஈடுபட்டனர். ஆனாலும் மின்பழுதை அவர்களால் சரிசெய்ய முடியவில்லை. இதுகுறித்து காரிமங்கலம் நகர உதவி செயற்பொறியாளர் சங்கர் குமாருக்கு ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற உதவி செயற்பொறியாளர் டிரான்ஸ்பார்மரில் ஆயில் உள்ளதா? என ஊழியர்கள் மூலம் பரிசோதித்தார்.

அப்போது தான் டிரான்ஸ்பார்மரில் இருந்த சுமார் 500 லிட்டர் ஆயில் முழுவதையும் மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இந்த ஆயிலின் மதிப்பு ரூ.1 லட்சம் என்று தெரியவந்தது. இதுகுறித்து உதவி செயற்பொறியாளர் சங்கர் குமார் காரிமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காரிமங்கலம்–மொரப்பூர் ரோட்டில் உள்ள தனியார் ஜூஸ் கம்பெனி அருகே உள்ள டிரான்ஸ்பார்மரிலும் ஆயில் திருட்டு போனது. இந்த தொடர் திருட்டால் மின்வாரிய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.


Next Story