தண்டவாளத்தில் விழுந்து ரெயில் சக்கரத்தில் சிக்கிய பள்ளி மாணவியின் கால்கள் சிதைந்தது


தண்டவாளத்தில் விழுந்து ரெயில் சக்கரத்தில் சிக்கிய பள்ளி மாணவியின் கால்கள் சிதைந்தது
x
தினத்தந்தி 20 Aug 2018 5:45 AM IST (Updated: 20 Aug 2018 3:22 AM IST)
t-max-icont-min-icon

தண்டவாளத்தில் விழுந்து ரெயில் சக்கரத் தில் சிக்கிய பள்ளி மாண வியின் கால்கள் சிதைந்தது.

தானே, 

தண்டவாளத்தில் விழுந்து ரெயில் சக்கரத் தில் சிக்கிய பள்ளி மாண வியின் கால்கள் சிதைந்தது.

தண்டவாளத்தில் விழுந்த மாணவி

தானே மாவட்டம் டோம்பிவிலி மான்பாடாவை சேர்ந்த மாணவி ரூனாலி மோரே (வயது14). இவள் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். சம்பவத்தன்று மாணவி தானே ரெயில் நிலையத்துக்கு வந்திருந்தாள். அங்கு 5-ம் எண் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த அவளை கூட்டத்தில் தெரியாமல் யாரோ இடித்து உள்ளனர். இதில் அவள் நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழுந்து விட்டாள்.

அப்போது தண்டவாளத் தில் வந்து கொண்டிருந்த மின்சார ரெயில் மாணவி ரூனாலி மோரே மீது மோதியது. இதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந் தனர்.

கால்கள் சிதைந்தது

இந்த நிலையில், மின்சார ரெயில் ஏறி இறங்கியதில் அவளது இரண்டு கால்களும் சக்கரத்தில் சிக்கி சிதைந்தது. இதனால் அவள் வேதனை தாங்க முடியாமல் துடித்தாள். தகவல் அறிந்து வந்த ரெயில்வே போலீசார் மாணவியை மீட்டு தானே மாநகராட்சி மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் அவள் மேல்சிகிச்சை க்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.

அங்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து, அவளது 2 காலிலும் சிதைந்த பகுதியை அகற்றினர். தொடர்ந்து மாணவி ரூபாலி மோரேக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story