ரெயில்நிலையத்தில் பெண்ணை மானபங்கம் செய்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் பணி நீக்கம்


ரெயில்நிலையத்தில் பெண்ணை மானபங்கம் செய்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் பணி நீக்கம்
x
தினத்தந்தி 20 Aug 2018 4:30 AM IST (Updated: 20 Aug 2018 3:31 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் நிலையத்தில் பெண்ணை மானபங்கம் செய்த ரெயில்வே பாது காப்பு படை போலீஸ் காரர் துறை ரீதியான விசாரணைக்கு பிறகு பணி நீக்கம் செய்யப்பட்டார்.

மும்பை, 

ரெயில் நிலையத்தில் பெண்ணை மானபங்கம் செய்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் காரர் துறை ரீதியான விசாரணைக்கு பிறகு பணி நீக்கம் செய்யப்பட்டார்.

பெண் மானபங்கம்

மும்பையில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் காரராக பணியாற்றி வந்தவர் ராகேஷ் ஜகாங்கீர். இவர் கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி கல்யாண் ரெயில் நிலையத் தின் 6-வது பிளாட்பாரத்தில் இருக்கையில் உட்கார்ந்து இருந்த பெண்ணை மான பங்கம் செய்தார். இந்த காட்சி கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத் தியது.

சமூக வலைதளத்தில் பரவிய அந்த வீடியோவில், ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்து தூங்குவது போல நடித்து பெண்ணை தொட்டு மானபங்கம் செய்கிறார்.

இது குறித்து அந்த பெண் பக்கத்தில் இருக்கும் உறவினரிடம் கூறுகிறார். உறவினர் போலீஸ்காரரை தாக்கி அங்கு இருந்து விரட்டும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

பணி நீக்கம்

இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் ராகேஷ் ஜகாங்கீர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையில் போலீஸ் காரர் ராகேஷ் ஜகாங்கீர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானது.

இதையடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Next Story