உள்ளாட்சி தேர்தல் வேட்புமனுவில் வேட்பாளர்கள் வருமான விவரங்களை குறிப்பிட வேண்டும் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
உள்ளாட்சி தேர்தல் வேட்புமனுவில் வேட்பா ளர்கள் வருமான விவரங் களை குறிப்பிட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
மும்பை,
உள்ளாட்சி தேர்தல் வேட்புமனுவில் வேட்பா ளர்கள் வருமான விவரங் களை குறிப்பிட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர் கள் வேட்பு மனு தாக்கலின் போது தங்களது சொத்து, கடன் விவரங்கள், கல்வி தகுதி போன்ற தகவல்களை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் உச்சநீதி மன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி அளித்த உத்தரவின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கலில் சில திருத் தங்கள் செய்யப்பட் டுள்ளது.
இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையர் ஜே.எஸ். சகாரியா கூறுகையில், இனிவரும் காலங்களில் மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சொத்துக்கள் மட்டுமின்றி வருமான விவரங்களையும் வேட்பு மனு தாக்கலில் குறிப்பிட வேண்டும் என்றார்.
3 ஆண்டு வருமான விவரம்
அதாவது உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும் ஒருவர், எந்த வகையில் எல்லாம் வருமானம் ஈட்டுகிறார் என்பதை குறிப்பிட வேண்டும். மேலும் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது, 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை எப்படி, எந்த வழிகளில் எல்லாம் பணம் சம்பாதித்தார். விவசாயம், தொழில், வியாபாரம், நன்கொடை என எந்த வழியில் அந்த பணம் வந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
ஒருவேளை ஒருவர் 2-வது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார் என்றால் கடந்த தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் கூறியிருந்த சொத்து, வருமான விவரங்களையும் குறிப்பிட வேண்டும். இதேபோல வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற்றால் என்ன வளர்ச்சி திட்டங்களை செய்வார் என்பது குறித்தும் 500 வார்த்தைகளுக்கு குறையாமல் குறிப்பிட வேண்டும்.
Related Tags :
Next Story