கட்டுமான நிறுவனத்திடம் ரூ.15 லட்சம் லஞ்சம்: மாநகராட்சி அதிகாரிகள் உள்பட 5 பேருக்கு ஜெயில் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
கட்டுமான நிறுவனத் திடம் ரூ.15 லட்சம் லஞ் சம் வாங்கிய வழக்கில் மாநகராட்சி அதிகாரி கள் உள்பட 5 பேருக்கு ஜெயில் தண்டனை வழங்கி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
மும்பை,
கட்டுமான நிறுவனத் திடம் ரூ.15 லட்சம் லஞ் சம் வாங்கிய வழக்கில் மாநகராட்சி அதிகாரி கள் உள்பட 5 பேருக்கு ஜெயில் தண்டனை வழங்கி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
ரூ.15 லட்சம் லஞ்சம்
மும்பையில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கியதாக மாநகராட்சி அதிகாரிகள் மீது புகார் வந்தது. இதை யடுத்து லஞ்ச ஒழிப்பு போலீ சார் நடத்திய விசாரணையில் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அந்த கட்டுமான நிறுவனத்திடம் இருந்து ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது.
இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி மும்பை மாநகராட்சி அதிகாரிகள் விலாஸ் கிலாரி (வயது46), பாலாஜி பிராஜ்தர் (35), சுனில் ரதோடு (46) மற்றும் உடந்தையாக இருந்த தனியார் கட்டுமான பொறி யாளர் சதீஸ் பலாவ் (59), நாராயண் பாட்டீல் (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
ஜெயில் தண்டனை
இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த கோர்ட்டு, மாநகராட்சி அதிகாரிகள் விலாஸ் கிலாரி, பாலாஜி பிராஜ்தர் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், அதிகாரி சுனில் ரதோடு மற்றும் உடந்தையாக இருந்த சதீஸ் பலாவ், நாராயண் பாட்டீலுக்கு தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.
Related Tags :
Next Story