தெற்கு ரெயில்வேயில் சுகாதார ஆய்வாளர் பணிகள்
தெற்கு ரெயில்வேயில் நர்சிங் சூப்பிரண்டன்ட் மற்றும் சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
சென்னையை தலைமை இடமாக கொண்டு தெற்கு ரெயில்வே செயல்படுகிறது. தற்போது தெற்கு ரெயில்வே மண்டலத்தில் நர்சிங் சூப்பிரண்டன்ட், சுகாதாரம் மற்றும் மலேரியா ஆய்வாளர், டயாலிசிஸ் டெக்னீசியன், ரேடியோகிராபர், பார்மசிஸ்ட், இ.சி.ஜி. டெக்னீசியன், லேப் அசிஸ்டன்ட் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 142 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணிவாரியான காலியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 33 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். நர்சிங் சூப்பிரண்டன்ட் பணிக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்களும், பார்மசிஸ்ட் பணிக்கு 35 வவயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.
நர்சிங்- மிட ்வைபரி படித்தவர்கள், துணை மருத்துவ பணியிடங்கள் உள்ள பிரிவுகளில் பி.எஸ்.சி., டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் ரூ.250-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 27-8-2018-ந் தேதியாகும்.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் rrcmas.in மற்றும் http://www.sr.indianrailways.gov.in/ ஆகிய இணையதள பக்கங்களைப் பார்க்கலாம்.
Related Tags :
Next Story