குமரியில் இருந்து கேரளாவுக்கு ரூ.75 லட்சம் நிவாரண பொருட்கள் 36 லாரிகளில் அனுப்பப்பட்டன
கேரளாவுக்கு 36 லாரிகளில் ரூ.75 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் குமரி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டன.
நாகர்கோவில்,
கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்த பேய் மழையினாலும், அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் ஏற்பட்ட வெள்ளத்தாலும், ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவுகளாலும் அம்மாநில மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கேரளாவின் 14 மாவட்டங்கள் இதனால் நிலை குலைந்துள்ளன. காட்டாற்று வெள்ளமாக பாய்ந்தோடிய மழை வெள்ளம் கோரத்தாண்டவம் ஆடி மக்களை சின்னாபின்னமாக்கியிருக்கிறது.
கேரளாவில் பெய்த கனமழைக்கு இதுவரை 197 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. மழை வெள்ளத்தில் ஆங்காங்கே தத்தளிக்கும் மக்கள் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலமும், படகுகள் மூலமும் ராணுவத்தினரும், மீட்பு படையினரும் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். காப்பாற்றப்பட்ட மக்கள் குடியிருப்புகளை இழந்து, உடைமைகளை இழந்து நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதோடு, உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி தவித்து வருகிறார்கள்.
அவர்களது இந்த பரிதாபகர நிலையை கருத்தில் கொண்டு கேரள மாநில அரசுக்கு மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன. தமிழக அரசு நிதியுதவி செய்ததோடு, நிவாரண பொருட்களையும் அனுப்பி வைத்து வருகிறது. கேரள மாநிலத்தின் அண்டை மாவட்டமாக விளங்கும் குமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் நாள்தோறும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
குமரி மாவட்ட கலெக்டர் வேண்டுகோளின்படி பொதுமக்கள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், சங்கங்களை சேர்ந்தவர்கள், தொழிலதிபர்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற அளவில் நிவாரண பொருட்களை வாரி வழங்கி வருகிறார்கள். குறிப்பாக புத்தாடைகள், உள்ளாடைகள், போர்வைகள், கம்பளிகள், கட்டில்கள் மற்றும் தலையணைகள், மருந்து பொருட்கள், குழந்தைகளுக்கு தேவையான பால் பொருட்கள், குடிநீர் பாட்டில்கள், நாப்கின்கள், பிஸ்கெட், பிரட், பழவகைகள், அரிசி, பருப்பு, மசாலா பொருட்கள் நிவாரண பொருள் சேகரிப்பு மையமாக அறிவிக்கப்பட்டுள்ள நாகர்கோவிலில் உள்ள குமரி கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்குக்கு வந்து குவிந்த வண்ணமாக உள்ளன.
அவற்றை கலெக்டர் அலுவலக ஊழியர்கள், நகராட்சி ஊழியர்கள், செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள், கல்லூரி மாணவ–மாணவிகள், பல்வேறு தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள், தன்னார்வலர்கள் என ஏராளமானோர் நிவாரண பொருட்களை பேக்கிங் செய்து, லாரிகளில் ஏற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கு நிவாரண பொருட்களால் நிறைந்திருப்பதோடு, பேக்கிங் பணியும் நடைபெறுவதால் பரபரப்புடன் காட்சி அளித்து வருகிறது.
நேற்று சுசீந்திரம் பகுதியை சேர்ந்த பெண்கள் பலர் நிவாரண பொருட்களை வாங்கி வந்து, நாஞ்சில் கூட்ட அரங்கில் இருந்த அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதேபோல் ராமன்புதூர் பகுதி நண்பர்கள் சங்கத்தினர் மற்றும் அரசு துறைகளை சேர்ந்தவர்கள், தனியார் சங்கங்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் என ஏராளமானோர் பெட்ஷீட்கள், போர்வைகள், கட்டில்கள் மற்றும் உணவு பொருட்கள், செவ்வாழை பழக்குலைகள், குடிதண்ணீர் பாட்டில்கள், சமையலுக்கு தேவையான பொருட்கள், மருந்து பொருட்கள் என ஏராளமான நிவாரண பொருட்களை வழங்கினர்.
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு நேற்று முன்தினம் வரை 33 லாரிகளில் ரூ.69 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கலெக்டர் பிரசாந்த் வடநேரே முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டன. நேற்று மாலை 4 மணி வரையில் மேலும் 3 லாரிகளில் நிவாரணப் பொருட்கள் கேரளாவுக்கு புறப்பட்டு சென்றன. மொத்தம் 36 லாரிகளில் ரூ.75 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் குமரி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளில் வருவாய்த்துறை ஊழியர் ஒருவர் உடன் செல்வதுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்தின் நிவாரண பொருட்கள் சேகரிப்பு மையத்தில் ஒப்படைத்து கையெழுத்து பெற்று வருகிறார்கள்.

Related Tags :
Next Story