வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் நிவாரண பொருட்கள்
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் நிவாரண பொருட்கள் நேற்று திருச்சியில் இருந்து ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
திருச்சி,
கேரள மாநிலத்தில் தொடர்ச்சியாக பெய்த வரலாறு காணாத மழையால் வெள்ளம் ஏற்பட்டு பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து கேரள மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள நிவாரணம் வழங்குபவர்கள் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் வெள்ள நிவாரண பொருட்களை அனுப்பியவாறு உள்ளனர்.
இந்த நிலையில் திருச்சி ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 16 ரெயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.) போலீஸ் நிலையங்களிலும் கேரள மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெள்ள நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன. அதன்படி போர்வைகள், லுங்கி, துண்டு, சட்டை, நைட்டி, சேலை, பிஸ்கட்டுகள், துவரம்பருப்பு, சர்க்கரை மூட்டைகள், தண்ணீர் பாட்டில்கள், அரிசி மூட்டைகள், நாப்கின் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன. திருச்சி கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை உதவி கமிஷனர் ஆர்.கே.போஸ் தலைமையில் திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுஜித்குமார் ராய், சப்-இன்ஸ்பெக்டர்கள் சவரிமுத்து, பன்னீர்செல்வம், மனோகர் ஆகியோர் இரவு 8 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து காரைக்காலில் இருந்து திருச்சி வழியாக எர்ணாகுளம் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில், சேகரிக்கப்பட்ட வெள்ள நிவாரண பொருட்களை கேரளா மாநிலத்துக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கேரள மாநிலத்திற்கு வெள்ள நிவாரண பொருட்களை அனுப்பி வைப்பதற்காக திருச்சி ரெயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் பல்வேறு அமைப்பினர் அவற்றை குவித்து வைத்திருந்தனர்.

Related Tags :
Next Story