பள்ளிபாளையம் புதிய பாலத்தில் விரிசல் உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
பள்ளிபாளையம் புதிய பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பள்ளிபாளையம்,
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்-ஈரோடு இடையே காவிரி ஆற்றின் மீது புதிதாக உயர்மட்ட பாலம் ரூ.30 கோடி செலவில் கட்டப்பட்டு கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 8-ந்தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்த பாலம் நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களை இணைக்கும் வகையில் திகழ்கிறது.
இதன் வழியாக ஈரோட்டில் இருந்து பள்ளிபாளையம், நாமக்கல், சேலம், திருச்சி, திருச்செங்கோடு, சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு பஸ், லாரி போன்ற வாகனங்கள் சென்று வருகின்றன. பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய பாலத்தின் கீழ் உள்ள காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்தநிலையில் இந்த பாலத்தில் உள்ள நடைபாதையில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. நடைபாதை தொடங்கும் பகுதியில் சுமார் 2 அடி நீளத்துக்கு விரிசல் காணப்படுகிறது. இதை பார்த்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதேபோல் கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி இந்த பாலத்தின் நடுவில் விரிசல் ஏற்பட்டது. அப்போது நெடுஞ்சாலை துறையினர் விரைந்து வந்து அதை சரி செய்தனர். புதிதாக கட்டப்பட்டு ஒரு ஆண்டு கூட முடிவடையாத அந்த பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தை பார்க்க மக்கள் கூட்டம், கூட்டமாக இந்த பாலத்துக்கு வந்து செல்கிறார்கள். இதுபற்றி பொதுமக்கள் கூறியதாவது:-
புதிய பாலம் கட்டி ஒரு ஆண்டு தான் ஆகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாலத்தின் நடுவில் விரிசல் ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் இதை சரி செய்தனர். தற்போது பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பழைய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதால் புதிய பாலத்தின் வழியாக அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அதிர்வு ஏற்படுகிறது. இது பயமாக உள்ளது. பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை உடனே சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story