தர்மபுரியில் அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தர்மபுரி,
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க தர்மபுரி மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். செயலாளர் முருகன், பொருளாளர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டமேற்படிப்பு சேவை டாக்டர்கள் சங்க மாநில தலைவர் லட்சுமி நரசிம்மன், மாவட்ட தலைவர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் கவுரிசங்கர், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க மாநில துணைத்தலைவர் ரெங்கசாமி, மாவட்ட நிர்வாகிகள் ஸ்டாலின், அபினேஷ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில், பணியில் சேரும்போது ஒரே ஊதிய நிலையில் உள்ள மத்திய-மாநில அரசு டாக்டர்களுக்கு சில ஆண்டுகளில் ஊதிய விகிதத்தில் மிகப்பெரிய முரண்பாடு ஏற்படுகிறது. மாத ஊதியத்தில் ரூ.40 ஆயிரம் வரை மாநில அரசு டாக்டர்கள் குறைவாக பெறும் நிலை காணப்படுகிறது. மத்திய அரசு டாக்டர்களுக்கு 13 ஆண்டுகளில் வழங்கப்படும் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு மாநில அரசு டாக்டர்களுக்கு 20 ஆண்டு பணி முடித்த பின்னரே வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே சிறப்பான மருத்துவ சேவையை அளிக்கும் தமிழக அரசு டாக்டர்களுக்கு மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் அரசு டாக்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story