தென்னக ரெயில்வே தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தென்னக ரெயில்வே தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Aug 2018 4:08 AM IST (Updated: 21 Aug 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கைவிடக்கோரி விழுப்புரத்தில் தென்னக ரெயில்வே தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம், 


விழுப்புரம் ரெயில் நிலையத்தில் உள்ள முதுநிலை பகுதி இருப்புப்பாதை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று காலை தென்னக ரெயில்வே தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் மத்திய கிளை தலைவர் ஜெயசேகர் தலைமை தாங்கினார். கிளை செயலாளர்கள் கடலூர் சுந்தர்ராஜ், விருத்தாசலம் செல்வம், திருவண்ணாமலை ஏழுமலை, விழுப்புரம் ஜெயக்குமார், ஸ்ரீதர், சிவகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக செயல் தலைவர் பழனிவேல் கலந்து கொண்டு, சங்க கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.

அதிக லாபத்தில் இயங்கும் ரெயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், ஓய்வு பெற்றவர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்தக்கூடாது, தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபடுபவர்களையும், கேட் கீப்பர்களையும் பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும், பெண் ஊழியர்களை என்ஜினீயரிங் கேட் கீப்பர்களாக வேலை வாங்குவதை கைவிட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் விருத்தாசலம் கிளை தலைவர் கணேஷ்குமார், ஓய்வு பெற்ற சங்க செயலாளர் அமரேசன், ஓடும் பிரிவு செயலாளர் செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் உதவி செயலாளர் ரகுநாத் நன்றி கூறினார். 

Next Story