தவளக்குப்பத்தில் துணிகரம்: நகைக் கடையில் கொள்ளை முயற்சி
தவளக்குப்பத்தில் மர்ம நபர்கள் நகைக் கடையின் பூட்டுகளை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். லாக்கரை உடைக்க முடியாததால் அங்கிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் தப்பின.
பாகூர்,
புதுச்சேரி ரெயின்போ நகரை சேர்ந்தவர் முகேஷ் (வயது 37). இவர் தவளக்குப்பம்-அபிஷேகப்பாக்கம் மெயின் ரோட்டில் அடகு கடையுடன் கூடிய நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் நகை மற்றும் பணத்தை கடையில் உள்ள லாக்கரில் வைத்து பூட்டிவிட்டு கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்றார்.
நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் இரும்பு ஷட்டர் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
யாரோ மர்ம நபர்கள் இரவில் நகைக்கடையின் 8 பூட்டுகளை வெல்டிங் கருவி மூலம் உடைத்து கதவை திறந்து உள்ளே புகுந்துள்ளனர். மேலும் கடையில் இருந்த லாக்கரை உடைக்க முயற்சி செய்து உள்ளனர். ஆனால் அதை உடைக்க முடியவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். அதனால் லாக்கரில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் தப்பின.
இந்த துணிகர கொள்ளை முயற்சி குறித்து முகேஷ் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
கடையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது கைலி அணிந்த 2 பேர் அடையாளம் காண முடியாதபடி முகத்தில் முகமூடி அணிந்து வந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும், அதற்கு முன்பு நகைக் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை அவர்கள் உடைப்பதும் பதிவாகி இருந்தது. அருகில் உள்ள கடையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
கொள்ளை முயற்சி நடைபெற்ற இடம் எப்போதும் வாகன போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் உள்ள பகுதியாகும். இதையும் மீறி வெல்டிங் எந்திரத்தின் உதவியுடன் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொள்ளை முயற்சி நடந்த இதே நகைக்கடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பின்பக்க சுவரில் துளைபோட்டு கொள்ளை முயற்சி நடந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story