மாநில சுயாட்சிக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது முத்தரசன் குற்றச்சாட்டு
மாநில சுயாட்சிக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டினார்.
நீடாமங்கலம்,
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் 27-வது மாவட்ட மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நீடாமங்கலத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வீராச்சாமி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் நடேச.தமிழார்வன் வரவேற்றார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பாசன வாய்க்கால்கள், ஆறுகள் தூர்ந்து போய் உள்ளன. விவசாய தொழிலாளர்களுக்கு வேலை உறுதியளிப்பு திட்டத்தின் மூலம் வாழ்வளிக்க முடியும். ஆனால் தமிழக அரசு இதனை கவனத்தில் கொள்வதில்லை. அ.தி.மு.க. தலைமையிலான இந்த ஆட்சி நீடிக்க வேண்டிய அவசியமில்லை.
தி.மு.க. தலைவர் கருணாநிதி இறந்த பின்பு அவருடைய உடலை அடக்கம் செய்ய நீதிமன்றத்தை நாடி மெரினாவில் இடம் பெற வேண்டிய நிலையை தமிழக அரசு ஏற்படுத்தி விட்டது. பெருந்தன்மையோடு மெரினாவில் இடம் கொடுக்க அரசு முன்வரவில்லை.
தமிழக முதல்-அமைச்சர் பதவி என்பது எடப்பாடி பழனிசாமியால் ஏலம் எடுக்கப்பட்ட பதவி. பணத்தால் பெட்டிகளை நிரப்புவதிலேயே அ.தி.மு.க.வினர் குறியாக உள்ளார்கள். உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முன்வரவில்லை. அதிகாரிகளுடைய ஆட்சி நடைபெறுகிறது. மாநில சுயாட்சிக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் ஆட்சியில் நீடித்தால் போதும் என அ.தி.மு.க.வினர் நினைக்கிறார்கள்.
பாசன வாய்க்கால்களை தூர்வாரவில்லை. மக்களுடைய வரிப்பணம் சூறையாடப்பட்டு விட்டது. பாசன விளை நிலங்களுக்கு தண்ணீர் தராத தமிழக அரசை கண்டித்து வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுப்பணித்துறை அலுவலகங்களில் முற்றுகை போராட்டம் நடைபெறும். போராட்டத்தின்போது தூர்வாரிய கணக்குகளை அதிகாரிகளிடம் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க ஒன்றிய நிர்வாகி ராதா நன்றி கூறினார்.

Related Tags :
Next Story